Advertisment

மேத்யூ சாமுவேல் சென்னைக்கு வரக்கூடாது - எடப்பாடி முடிவு

ம்

Advertisment

முதல்வர் எடப்பாடி கொடநாட்டில் கொள்ளை மற்றும் கொலைகள் செய்ததாக குற்றம் சாட்டியிருக்கும் பிரபல பத்திரிகையாளரான மேத்யூ சாமுவேல் நாளை சென்னைக்கு வரவிருக்கிறார். இதைப்பற்றி மேத்யூ தனது முகநூலில் செய்தி வெளியிட்டுள்ளார். எடப்பாடி என்கிற கோலியாத்துடன் டேவிட் மோதும் நிகழ்வு இது என அந்த முகநூலில் தனது சென்னை வருகை பற்றி மேத்யூ பதிவு செய்துள்ளார்.

மேத்யூவை சென்னை நகருக்குள் வரவிடமாட்டோம். அவர் சென்னைக்குள் வந்தால் கலவரம் ஏற்படும் என அவரை கைது செய்ய சென்னை நகர காவல்துறை திட்டமிட்டுள்ளதாக மேத்யூ தெரிவிக்கிறார். இதற்கு இடையே கொடநாட்டில் கொள்ளையடித்ததாக பேட்டியளித்த சயான், வாலையார் மனோஜ், ஜம்சீர் ஆகியோரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என தமிழக போலீசார் கோத்தகிரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனு ஏற்கப்பட்டால் சென்னைக்கு வரும் மேத்யூவோடு சயான், மனோஜ், ஜம்சீர் ஆகியோரை சிறையில் அடைக்க தமிழக காவல்துறை முடிவு செய்துள்ளது என மேத்யூ நம்மிடம் தெரிவித்தார். இதுப்பற்றி நம்மிடம் பேசிய காவல்துறை அதிகாரிகள், கொடநாடு கொலை மற்றும் கொள்ளை ஆகியவற்றை எடப்பாடிதான் செய்தார் என மேத்யூ குற்றம் சாட்டுவது முதலமைச்சர் எடப்பாடியை பாதித்துள்ளது. எனவே, மேத்யூவை பழிவாங்க எடப்பாடி, எதை வேண்டுமானாலும் செய்வார் என்கிறார்கள்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe