Advertisment

"கெஜ்ரிவால் வெற்றிக்கு காரணமே தேமுதிக தான்" -பிரேமலதா அதிரடி! 

சென்னையில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் 20-ஆம் ஆண்டு கொடிநாள் விழா நடைபெற்றது. விஜயகாந்த் கொடியேற்றினார். அந்த நிகழ்ச்சியில், கலந்துகொண்ட பிரேமலதா விஜயகாந்த், "டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் ஜெயித்து ஆட்சியை தக்க வைத்துக்கொண்டதற்கு நாங்கள்தான் காரணம்" என பேசு தேமுதிக தொண்டர்களுக்கு கிச்சு கிச்சி மூட்டியிருக்கிறார்.

Advertisment

premalatha vijayakanth

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

விழாவில் பேசிய அவர்,"இன்றைக்கு எத்தனையோ மாநிலங்களில் யார் யாரோ முதலமைச்சர்களாக வருகிறார்கள். விஜயகாந்த் அறிமுகப்படுத்திய திட்டங்களை பின்பற்றிதான் அவர்களால் வெற்றி பெற முடிகிறது. முதல் தேர்தல் அறிக்கையிலேயே, வீடு தேடி ரேசன் பொருட்கள் வரும் என சொன்ன ஒரே தலைவர் விஜயகாந்த்தான். ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி இதை நடைமுறைப்படுத்துகிறார்.

டெல்லியில் 3-வது முறையாக முதல்வராகி இருக்கும் கெஜ்ரிவாலுக்கு தேமுதிகவின் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம். லஞ்சம் ஊழல் இல்லாத நேர்மையான அரசு என்று விஜயகாந்த் கூறியதை வைத்துதான் கெஜ்ரிவால் இன்று முதல்வராகி இருக்கிறார். அதனால் தமிழக மக்களுக்கு உழைக்கிற சிறந்த தலைவர் விஜயகாந்த் மட்டும்தான். அவருடைய ஒவ்வொரு கொள்கையையும் மற்ற மாநிலங்கள் பயன்படுத்துகின்றன.

ஆட்சி அமைக்க தேமுதிகவுக்கு வாய்ப்பு கொடுத்திருந்தால் லட்சம் வாக்குறுதிகளை நிறைவேற்றி தமிழ்நாட்டையே சிறந்த மாநிலமாக மாற்றி இருப்போம். விஜயகாந்தை தவறவிட்டுக் கொண்டிருப்பவர்கள் தமிழக மக்கள்தான். இனிவரும் காலங்களிலாவது நல்ல தலைவனை அங்கீகரிக்க வேண்டும். தேமுதிகவா? என்ன கொள்கை இருக்கிறது? என்று வாய்கிழிய பேசியவர்களுக்கு பெரிய விளக்கம் எதுவும் தேவை இல்லை. எங்களுடைய மூவர்ண கொடியில் அத்தனை கொள்கையும் அடங்கி இருக்கிறது.

தமிழ்நாட்டை மட்டுமல்ல இந்தியாவை மதத்தின் பெயரால், ஜாதியின் பெயரால், மொழியின் பெயரால் துண்டாடுகிற அரசியல் கட்சிகள்தான் இன்றைக்கு இருக்கின்றன.

ஆனால் ஒன்றே குலம் ஒரே தேவன் என்று சொல்லக் கூடிய ஜாதி, இனம், மதம், மொழிக்கு அப்பாற்பட்டு செயல்படக் கூடிய ஒரே தலைவர் விஜயகாந்த். அனைவருக்கும் ரத்தம் , சிவப்பு என்பதை கொடியில் வைத்துள்ளோம். செல்வம், வளத்தை குறிக்க மஞ்சள் நிறத்தை வைத்திருக்கிறோம். கருப்பு என்பது மக்களுக்கு தேவையற்றதை நீக்குவதாகும். நமது ஜோதி மூலம் பிரகாசமான ஒளியை ஏற்றுவோம் என்பதும் கொடியில் உள்ளது. கூட்டணி தர்மத்தை என்றைக்கும் விஜயகாந்த் மதிப்பவர். கூட்டணியில் இருக்கும் அனைத்து கட்சிகளும் அந்த தர்மத்தை கடைபிடிக்க வேண்டும்" என்றார் ஆவேசமாக.

dmdk Aam aadmi Delhi Premalatha Aravind Kejriwal
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe