Advertisment

வெள்ளிக் கொலுசு மே 2ஆம் தேதி ஜொலிக்குமா?

dddd

Advertisment

சட்டமன்றத் தேர்தலில் கடந்த முறை வெற்றிபெற்ற அதிமுக வேட்பாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்களாகி அந்தக் கட்சியின் மேல்மட்ட நிர்வாகிகளைப் பிடித்து அவர்களின் ஆதரவோடு அமைச்சரானார்கள். அவர்களில் சிலர் இந்த முறை நடைபெற்ற தேர்தலிலும் பங்கு பெற்றுள்ளனர்.

ஆனால் கடந்த முறை வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகி ஐந்தாண்டு காலம் பதவியில் இருந்தும் தன்னுடைய தொகுதியை நேரில் சென்று பார்த்து அதன் தேவையை அறிந்து அதற்கான வளர்ச்சிப் பணிகளைச் செய்தவர்களை விரல்விட்டு எண்ணிவிடக் கூடிய அளவிற்குத் தான் உள்ளனர்.

ஐந்தாண்டு காலமாக தன்னுடைய தொகுதிக்கு சென்றுகூட பார்க்காத போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீண்டும் கரூர் தொகுதியில் போட்டியிட்டுள்ளார். இதுவரை தன்னுடைய தொகுதியை எட்டிப் பார்க்காத அவருக்குப் பலத்த எதிர்ப்பு இருக்கும் என்பதை அறிந்து முதலில் நாம் சரி செய்ய வேண்டியது பெண்களைத்தான் என்று புரிந்துகொண்டு, தன்னுடைய தொகுதியில் உள்ள பெண்களுக்குத் தேர்தல் பரிசாக வெள்ளிக் கொலுசு கொடுத்து அவர்களைச் சமாதானப்படுத்தி வைத்துள்ளார் என்கின்றனர் தொகுதி வாசிகள்.

Advertisment

ஐந்து வருடம் சென்று பார்க்காத வாக்காளர்களை தேர்தல் ஆணையம் கொடுத்த அந்த 25 நாளில் மக்களை நேரடியாகச் சென்று தொகுதிக்குச் செலவு செய்ய வேண்டிய மொத்தப் பணத்தையும் வாக்காளர்களுக்கு வெள்ளிக்கொலுசாகவே கொடுத்திருக்கிறார்.மே இரண்டாம் தேதி வரை சற்றுப் பொறுத்திருந்து பார்ப்போம்,விஜயபாஸ்கர் கொடுத்த வெள்ளிக்கொலுசு ஜொலிக்குமா என்று...

Candidate karur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe