Skip to main content

2 மணி நேரம் டாஸ்மாக் கடையைத் திறக்க வேண்டும்... நான் மாறுபட்ட சிந்தனை உள்ளவன்.... கார்த்திக் சிதம்பரம் பேட்டி

Published on 11/05/2020 | Edited on 11/05/2020


 

Karti Chidambaram


சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் கரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு தன் வீட்டில் இருந்தபடியே ஒரு வீடியோ பதிவு வெளியிட்டு, நான் வீட்டில் இருக்கிறேன். நீங்களும் பாதுகாப்பாக வீட்டில் இருங்கள். ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் வாட்ஸ் அப், அல்லது போனில் தொடர்பு கொண்டு சொன்னால் அந்த உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கிறேன். மேலும் வெளிமாநிலங்களில் யாரேனும் வரமுடியாமல் தவித்தாலோ, உணவுக்காக சிரமப்பட்டாலோ அவர்கள் பற்றிய தகவல் கொடுத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த வீடியோ பதிவு வெளியாகி இருந்தது. 
 

இந்த நிலையில் தான் இன்று சிவகங்கை தொகுதியில் உள்ள ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் ஆலங்குடி, வடகாடு, கீரமங்கலம் ஆகிய ஊர்களில் தூய்மைப் பணியாளர்களுக்க 5 கிலோ அரிசியை நிவாரணமாக வழங்கிய பிறகு உங்களுக்காகத் தேவைகள் இருந்தால் தயங்காமல் சொல்லுங்கள் செய்கிறேன். வீட்டில் உங்கள் குழந்தைகளைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொன்னவர். தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் பேசினார்.
 

அப்போது, மதுவிலக்குப் பிரச்சனையில் மற்ற அரசியல் கட்சி தலைவர்களின் கருத்துகளுடன் நான் மாறுபட்டு நிற்கிறேன். என்னைப் பொறுத்தவரை தமிழகத்தில் பூரண மதுவிலக்கு என்பது சாத்தியமில்லை. அந்தக் கொள்கையும் வெற்றி பெறாது. அமெரிக்காவில் 1930 இல் பூரண மதுவிலக்கு கொண்டு வந்த போது மாபியாக்கள் ஆல்ககால் விற்கத் தொடங்கினார்கள்.


அதே போல இன்றைக்கும் சவுதி அரேபியாவில் ஈரானில் பூரண மதுவிலக்கு சட்டப்படி உள்ளது. ஆனால் அங்கேயேயும் அமல்படுத்த முடியவில்லை. இந்தியாவில் குஜராத்தில் மதுவிலக்கு எனச் சொல்கிறார்கள் ஆனால் காந்தி பிறந்த போர்பந்தரில் தான் அதிக அளவில் மாஃபியாக்கள் இருக்கிறார்கள். மதுவிலக்கு என்றாலே உடனடியாக ஆல்கஹால் மாஃபியாக்கள் அங்கே வந்துவிடுகிறார்கள். கள்ளச்சாராயம் உள்ளே வந்துவிடும். 
 

புதுக்கோட்டை மாவட்டத்திலேயே சேவிங் லோசனை குடித்து 3 பேர் இறந்துள்ளனர். மதுவால் பல கேடுகள் உள்ளது என்பதை நன்கு அறிவேன். மது அருந்தக் கூடாது என்ற வாதத்தையும் ஏற்றுக் கொள்கிறேன். 45 நாட்களாக மதுக்கடைகளைத் திறக்காமல் ஒரே நாளில் கடையைத் திறந்ததால் தான் இ்வ்வளவு கூட்டம் வந்தது. அதற்கு மாறாக நாள்தோறும் இரண்டு மணி நேரம் மதுக்கடைகளைத் திறந்து இருந்தாலே ஒரே நாளில் மதுபானப் பாட்டில்களை வாங்கக் கூட்டம் குவிந்து இருக்காது. தமிழக அரசு ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்து இருந்தால் இவ்வளவு பிரச்சினை வந்திருக்காது. மதுக்கடைகளை முற்றிலுமாக மூடியதால் தான் மாற்று போதை தேடி மக்கள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. கோயில் பள்ளிக் கூடங்களுக்கு அருகில் கடைகளை வைக்காமல் மாற்று இடங்களில் கடைகளை வைத்து 2 மணி நேரம் விற்பனை செய்வதுடன் ஆன்லைன் மது விற்பனை செய்யலாம். தமிழக அரசு மேல்முறையீடு என்பது எந்த அடிப்படையில் நீதிமன்றம் போய் இருக்கிறார்கள் எனத் தெரியாது. 
 

காமராஜர் வழிவந்த நீங்கள் மதுவிலக்கு சாத்தியமில்லை என்று சொல்வது? 
 

அதைத்தான் சொல்கிறோன். நான் மாறுபட்டு இருக்கிறேன். பிராக்டிக்கலாக இருக்கிறேன். யதார்த்தத்தைச் சொல்ல கூச்சப்பட்டதில்லை. தமிழக அரசு ஊரடங்கை முறையாகச் செய்யவில்லை. அதனால் தான் கோயம்பேட்டில் போய்க் குவிந்து நோய்த் தொற்று அதிகரித்துள்ளது. தமிழக அரசால் பொதுமக்கள் நிறைய பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களுக்கு ரூபாய் 7 ஆயிரம் உதவித் தொகை கொடுக்க வேண்டும். இதே போல இந்தியா முழுவதும் உள்ள தொழிலாளர்களுக்கு முன் எச்சரிக்கையாக அனுப்பாமல் வேலையும் கொடுக்காமல் உணவின்றி தவித்து 1,000 கி.மீ வரை நடந்து சென்றுள்ளனர். மனிதநேயமே இல்லாம் மத்திய, மாநில அரசுகள் செயல்படுகிறது.
 

டாஸ்மாக் கடைகள் திறப்பு குறித்து ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருக்கிறாரே?
 

அரசியல் கட்சி தலைவர்களின் கருத்துகளுத்தான் நான் பதில் சொல்லமுடியும். 
 

வைரசுடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்ற மத்திய அரசின் பேச்சு?
 

http://onelink.to/nknapp

 

வைரஸ் என்பது அனைவரின் உடலிலும் இருக்கும். சளி கூட ஒரு வைரஸ் தான். இது எல்லா காலத்திலும் உள்ளது. இப்போது வீரியமாக உள்ள வைரஸ் பிறகு வலுவிழந்துவிடும். அதனால் வல்லுநர்களின் கருத்துகள் அடிப்படையில் அப்படிச் சொல்லி இருக்கலாம். அது தவறு என்று சொல்லமாட்டேன்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

”பாஜக அரசு மிரட்டி பணம் பறித்திருக்கிறது" -கார்த்திக் சிதம்பரம்

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
BJP government has misused power to extort money says Karthi Chidambaram

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் விஜய் இளஞ்செழியன் குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, “தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை பெற்றதில் பாஜக அரசு அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தி மிரட்டி பணம் பறித்திருக்கிறது. லாபமே இல்லாத கம்பெனிகள் எல்லாம் இவ்வளவு நிதி நன்கொடையாக கொடுத்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது. உச்சநீதிமன்றம் இதில் யார் நன்கொடை கொடுத்தார்கள் யார் பெற்றார்கள் என்பதை மட்டும் விசாரிக்காமல்   இதன் பின்னணியையும் விசாரிக்க வேண்டும். மேலும்  இதனை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான தனி விசாரணை கமிட்டி அமைத்து விசாரிக்க வேண்டும்” என்றார்.

இதனைத் தொடர்ந்து, ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கார்த்தி சிதம்பரம் “ஒரே நாடு ஒரே தேர்தல் பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு விரோதமானது. எதற்காக இந்த நாடாளுமன்ற தேர்தலை ஒன்றரை மாதம் நடத்துகிறார்கள். மோடியின் தேர்தல் சுற்றுப்பயண விவரங்களை முன்கூட்டியே பெற்றுக்கொண்டு அந்த  பயணத்தை அடிப்படையாக கொண்டே தேர்தல் தேதிகளை அமைத்து இருக்கிறார்கள்.

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அறிவிப்பதற்கு முன்பாக ஒரே நாளில் தேர்தலை நடத்தலாம் நமது நாட்டில் அதற்கான கட்டமைப்பு இல்லையா? ஈரான் ,ஈராக் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் ஆகியவற்றை ஒன்றிணைத்த அகண்ட பாரதத்தில் வேண்டுமானால்  400 தொகுதிகளை ஜெயிப்பதாக பாஜக கனவு காணலாம்.

பாஜக என்பது ஹிந்தி இந்துத்துவா கட்சி ஹிந்தி பேசாத மாநிலங்கள் என எடுத்துக்கொண்டால் குஜராத்தை தவிர வேறு எந்த மாநிலத்திலும் செல்வாக்கே கிடையாது. தமிழகம் பாண்டிச்சேரி உட்பட 40 தொகுதிகளில் திமுக  இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்” என்றார்.