Advertisment

ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் கைது!

karthick

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் இன்று காலை சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் அந்நிய முதலீடு பெற அனுமதி வழங்கிய விவகாரத்தில், சட்டவிரோதமாக பணம் கைமாறியதாக கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. குற்றம்சாட்டியுள்ளது. அவரை தேடப்படும் நபராக அறிவித்து லுக் அவுட் நோட்டீசும் வெளியிட்டது. இதனால் அவர் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

Advertisment

எனவே, லுக் அவுட் நோட்டீசை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார். அந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சமீபத்தில் மாற்றப்பட்டது.

இதையடுத்து, தொழில் விஷயமாக வெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்தார். கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த பிரதான வழக்கின் விசாரணை மார்ச் 12-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர் ராமனை அமலாக்க துறை அதிகாரிகள் கடந்த பிப்.16ம் தேதி கைது செய்தனர். அதே சமயம் முன்ஜாமின் கோரி கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்திருந்தது.

இந்நிலையில், நீதிமன்ற அனுமதியுடன் லண்டன் சென்று திரும்பிய நிலையில், வழக்கின் விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் முழு ஒத்துழைப்பு தரவில்லை என குற்றம்சாட்டிய சிபிஐ, கார்த்தி சிதம்பரத்தை சென்னையில் இன்று காலை கைது செய்துள்ளது.

karthick
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe