Advertisment

மீனவர்கள் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவம்; இலங்கைக்கு இந்தியா கடும் கண்டனம்!

karaikkal fishermen issue India condemns Sri Lanka

புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட காரைக்கால் மாவட்டத்தில் கிளிஞ்சல் மேடு என்ற மீனவ கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த வேல் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் நேற்று முன்தினம் (26.01.2025) காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட 13 மீனவர்கள் உரிய அனுமதிச் சீட்டு பெற்று விசைப்படகுகளில் வழக்கம்போல் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். அதன்படி மீனவர்கள் கோடியக்கரை அருகே நேற்று (27.01.2025) இரவு மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

Advertisment

அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். மேலும் அந்த படகில் இருந்த 13 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்தனர். அதோடு மீனவர்களின் ஒரு விசைப்படகையும் இலங்கைக் கடற்படையினர் சிறை பிடித்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 2 காரைக்கால் மீனவர்கள் காயமடைந்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விசாரணைக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தில் உள்ள மீன்வளத்துறை அதிகாரிகளிடம் கைது செய்யப்பட்ட மீனவர்கள் ஒப்படைக்கப்பட்டார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, காரைக்காலைச் சேர்ந்த மீனவர்கள் 13 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் காரைக்கால் மீனவர்கள் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவம் இலங்கைக்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக டெல்லியில் உள்ள இலங்கைத் தூதரை வரவழைத்து மத்திய அரசு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அப்போது எந்த சூழலிலும் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை ஏற்க முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதோடு காயமடைந்த மீனவர்களை இலங்கைக்கான இந்திய துணைத் தூதர் நேரில் சந்தித்து துப்பாக்கிச்சூடு பற்றி கேட்டறிந்ததாக வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் கொழும்பில் உள்ள இலைக்கான இந்தியத் தூதர் இலங்கை அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சகத்திடமும் இது குறித்து கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

fisherman karaikkal
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe