சிகிச்சைக்கு சிறப்பாக ஒத்துழைப்பு அளிக்கும் கலைஞர்!

ks

திமுக தலைவர் கலைஞரின் உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவ சிகிச்சைகளுக்கு கலைஞர் சிறப்பாக ஒத்துழைப்பு அளித்து வருகிறார். கலைஞரின் உடல்நிலை படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது என்று காவேரி மருத்துவமனை இன்று மாலை அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும், வயது காரணமாக கலைஞர் மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டியுள்ளது. கலைஞரின் கல்லீரல் செயல்பாடு, ரத்த ஓட்டம் ஆகியவைசீராக்கப்பட வேண்டியுள்ளது.

kau

ஜூலை 28ம் தேதி ரத்த அழுத்தம் குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட அவரை மருத்துவக்குழு சீராக்கியது. ஜூலை 29ம் தேதி கலைஞருக்கு மூச்சு விடுவதில் ஏற்பட்ட பிரச்சனையை மருத்துவக்குழு சரி செய்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

kalaignar kalaignar cauvery hospital stalin
இதையும் படியுங்கள்
Subscribe