Advertisment

கலையாத தொண்டர்கள் கூட்டத்தால், கலைஞர் வீட்டின் கதவுகள் மூடப்பட்டு, விளக்குகளும் அணைக்கப்பட்டன!

gate

Advertisment

திமுக தலைவரின் உடல்நிலைக்கு ஒன்றும் பாதிப்பில்லை என்று கட்சி நிர்வாகிகள் கூறியும் தொண்டர்கள் கலையாததால், கலைஞர் வீட்டின் கதவு இழுத்து சாத்தப்பட்டு, விளக்குகளும் அணைக்கப்பட்டன.

திமுக தலைவர் கலைஞரின் உடல்நிலை நலிவு ஏற்பட்டுள்ளதாக இன்று மாலை காவேரி மருத்துவமனை விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டது. அதில், திமுக தலைவர் கலைஞரின் உடல்நலத்தில் வயதின் காரணமாக நலிவு ஏற்பட்டுள்ளது. தற்போது சிறுநீரக பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றின் காரணமாக காய்ச்சல் வந்துள்ளது. அதற்குத் தேவையான மருந்துகள் செலுத்தப்படுகின்றன. அவரை 24மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய குழு கவனித்துக்கொள்கிறது. வீட்டிலையே மருத்துவமனை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டிருக்கிறுது.

மேலும், கலைஞர் உடல்நிலையை கவனத்தில் கொண்டு, அவரை யாரும் நேரில் பார்க்க வர வேண்டாம் என்று மருத்துவர்கள் கேட்டுக்கொண்டதாக காவேரி மருத்துவமனை சார்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

kala

இந்நிலையில், கலைஞரின் உடல்நிலை நலிவு ஏற்பட்டுள்ளதாக காவிரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து, கலைஞரின் உடல்நிலையை விசாரிக்க துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி உள்ளிட்டவர்கள் அரசியல் நாகரிகம் கருதி வருகை தந்ததனர்.

இதனைதொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வருகை தந்தனர். இதேபோல், திமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பத்திரிக்கையாளர்கள் என பலரும் கலைஞர் இல்லத்தை சூழந்துள்ளனர்.

திமுக தலைவரின் உடல்நிலைக்கு ஒன்றும் பாதிப்பில்லை என்று கட்சி நிர்வாகிகள் கூறியும் தொண்டர்கள் கலையாததால், கலைஞர் வீட்டின் கதவு இழுத்து சாத்தப்பட்டு, விளக்குகளும் அணைக்கப்பட்டன.

kalaignar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe