/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kalaisss.jpg)
திமுக தலைவர் கலைஞரின் உடல்நிலையில் சிறிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டதால், சக்கர நாற்காலியில் அமரவைக்கப்பட்டார்.
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
திமுக தலைவர் கலைஞர் உடல்நலக்குறைவுக் காரணமாக காவேரி மருத்துவமனையில் கடந்த 6 நாட்களாக சிகிச்சை பெற்றுவருகிறார். அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது என மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதற்கிடையே பல அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் காவேரி மருத்துவமனைக்கு சென்று, கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரித்து செல்கின்றனர்.
இந்நிலையில், இன்று சிகிச்சையின் ஒரு பகுதியாக கலைஞரை அரை மணி நேரம் சக்கர நாற்காலியில் உட்கார வைத்திருந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னதாக படுக்கையில் இருந்தபடி சிகிச்சை பெற்று வந்த கலைஞர் தற்போது சக்கர நாற்காலியில் அமரவைகப்பட்டுள்ளார். சிகிச்சையின் ஒரு பகுதியாக சக்கர நாற்காலியில் அமர வைக்கப்பட்டதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)