ADVERTISEMENT

டிராக்டர் ஓட்டிய செங்கோட்டையன்... -''ஆக, அடுத்து இதுதான்...'' -ர.ர.க்கள் கமென்ட்

02:06 AM Aug 06, 2020 | rajavel

ADVERTISEMENT

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து மாநில அரசு நிபுணர் குழு அமைத்து கருத்து கேட்ட பிறகு என்ன செய்வது என செயல்படுத்தபடும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

ஜூலை 5ந் தேதி ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குருமந்தூர்மேட்டில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் விழா நடைபெற்றது. அதில் குள்ளம்பாளையம் ஒடையாக்கவுண்டன்பாளையம் என நான்கு ஊராட்சிகளில் உள்ள மகளிர் கூட்டமைப்பினர்களுக்கு டிராக்டர் உட்பட வேளாண் கருவிகளை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார். அதனை தொடர்ந்து, அயலூர் செம்மாண்டம்பாளையம் ஆரம்பசுகாதாரநிலையத்தில் குடிநீர் திட்டத்தையும் கூட்டுதல் படுக்கை வசதி அறைகளையும் திறந்துவைத்தார்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், 10 தொலைக்காட்சிகள் மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்தும் திட்டத்தை நேற்று முன்தினம் முதல்வர் தொடங்கிவைத்துள்ளார். மேலும் இரண்டு தொலைக்காட்சிகளில் பாட வகுப்புகள் ஒளிபரப்பப்பட்டுள்ளது. அரசு வேண்டுகோளை ஏற்று விளம்பரம் இல்லாமல், தொலைக்காட்சி நிறுவனங்கள் தன்னலம் கருதாது நேரம் ஒதுக்கியதற்கு நெஞ்சார்ந்த நன்றிகள். கியூஆர் கோடு மூலம் கல்வியில் வரலாறு படைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் புதிய கல்விக்கொள்கையில் அரசின் சார்பில் என்ன நடைமுறைப்படுத்தலாம் என்கிற யோசனையில் நிபுணர் குழு அமைத்து கருத்து கேட்ட பிறகு என்ன செய்வது என அவை செயல்படுத்தபடும். கஸ்தூரி ரங்கன் கமிட்டி மாநிலங்களில் கருத்து கேட்கப்பட்ட கேள்விக்கு முதல்வர் ஆலோசனையுடன் கடிதங்கள் எழுதப்பட்டுள்ளதாவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மகளிர் குழுக்களுக்கு டிராக்டர் வழங்கியபோது ஒரு டிராக்டரில் ஏறி அதை ஸ்டார்ட் செய்த செங்கோட்டையன் சிறிது தூரம் ஒட்டினார். டிராக்டர் பின்னால் ஓடி வந்த கட்சி நிர்வாகிகள், ''அண்ணே இதே போல் வயக்காட்டில் ஒட்டுவீங்களா?'' என கிண்டலாக கேட்க, ''அட என்னப்பா அடுத்த எலெக்ஷனுக்குப் பிறகு வயக்காட்டுல தான் அண்ணனுக்கு வேலையே...'' என மற்றுமொரு நிர்வாகி பதில் கொடுத்து கலகலப்பூட்டினார். ஆக, செங்கோட்டையனின் அரசியல் வாழ்வு இந்த அரசின் காலகட்டம் வரைக்கும்தான் என உள்ளுர் நிர்வாகிகளே நம்பிக்கையோடு உள்ளார்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT