Advertisment

ஜெயக்குமார் தனசிங் மரண வழக்கு; வெளியான அதிர்ச்சி தகவல்!

Jeyakumar dhanasingh case Shocking information released

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் கடந்த 2 ஆம் தேதி (02.05.2024) வெளியே சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அதனைத் தொடர்ந்து அவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் எனப் பலரும் பல இடங்களிலும் தேடிப் பார்த்துள்ளனர். அப்போதும் ஜெயக்குமார் கிடைக்கவில்லை.

Advertisment

இதனையடுத்து அவருடைய மகன் கருணையா ஜப்ரின் (வயது 28) உவரி காவல்துறையில் இது தொடர்பாக கடந்த 3 ஆம் தேதி (03.05.2024) புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், காணாமல் போன ஜெயக்குமாரைத் தீவிரமாக தேடி வந்தனர். இத்தகைய சூழலில் ஜெயக்குமார் கரைச்சுத்து புதூரில் உள்ள வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் உடல் பாதி எரிந்த நிலையில் கடந்த 4 ஆம் தேதி (04.05.2024) சடலமாக மீட்கப்பட்டார். இதனையடுத்து ஜெயக்குமார் தனசிங் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது தொடர்பாக 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisment

இந்நிலையில் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக பகீர் தகவல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயக்குமார் சுமார் 4 முதல் 5 மணி நேரம் வரை அடித்து துன்புறுத்தப்பட்டிருக்கலாம். அவரின் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு, உடல் முழுவதும் கம்பியால் சுற்றப்பட்டு இருந்ததும் தெரியவந்துள்ளது. உயிரிழந்த பின்னர் 4 மணி நேரம் கழித்து அவரது உடல் எரிக்கப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஜெயக்குமாரின் வயிற்றில் கடப்பா கல், இரும்பு தகடுகள் கட்டப்பட்டு உடல் ஏரிக்கப்பட்டுள்ளது என்ற பகீர் தகவலும் வெளியாகியுள்ளது.

congress police Tirunelveli
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe