Skip to main content

ஜன.6 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு- பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

Published on 03/01/2020 | Edited on 03/01/2020

 

JAN 6 TH SCHOOLS REOPENING  TN EDUCATION DEPARTMENT ANNOUNCED


தமிழகத்தில் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகள் ஜனவரி 6- ஆம் தேதியான திங்கள்கிழமை திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 
 

சார்ந்த செய்திகள்

 

Next Story

கிட்ஸ் ஃபேவரைட்; கேம்லின் நிறுவனத்தின் தலைவர் காலமானார்

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
90s Kids Favorite; The chairman of Camlin Company has passed away

கேம்லின் நிறுவனத்தின் தலைவர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்த பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

80, 90 கிட்ஸ் பள்ளி மாணவர்கள் முதல் தற்போதைய 2கே பள்ளி மாணவர்கள் வரை பள்ளி கால அடையாளமாக திகழ்ந்து வருவது 'கேம்லின்' ஸ்டேஷனரி நிறுவனத்தின் எழுதுபொருட்கள்.  பள்ளி வாழ்வில் முக்கியமான ஒன்றாக கேம்லின் ஸ்டேஷனரி நிறுவனத்தின் எழுது பொருட்கள் மற்றும் ஜாமென்ட்ரி பாக்ஸ், ஓவியம் வரைவதற்கான பொருட்கள் இருக்கிறது. இந்த நிறுவனத்தின் தலைவர் சுபாஷ் தண்டேகர் மும்பையில் வசித்து வந்தார். 1931 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட  கேம்லின்  நிறுவனம் ஜப்பான் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வந்தது.

90s Kids Favorite; The chairman of Camlin Company has passed away

86 வயதான சுபாஷ் தண்டேகர் வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் சில தினங்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை சிகிச்சைப் பலனின்றி சுபாஷ் தண்டேகர் உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அவரது உடலுக்கு இறுதிச் சடங்கு செய்யப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது. இவரது மறைவுக்கு மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வர் தேவேந்திர பட்நாயக் உள்ளிட்ட பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Next Story

‘முற்றிலும் வதந்தியே..’ - ராமதாஸ் அறிக்கைக்குத் தமிழக அரசு விளக்கம்!

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
Tamil Nadu govt explanation for Ramdas report regarding online liquor sale

ஆன்லைன் வினியோக நிறுவனங்கள் மூலமாக வீடுகளுக்கே மதுவை கொண்டு சென்று விற்க திட்டமா? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில்  பீர், ஒயின், மணமூட்டப்பட்ட மதுவகைகள் போன்ற குறைந்த அளவில் ஆல்கஹால் கொண்ட மதுவகைகளை சொமாட்டோ, ஸ்விக்கி, பிக்பேஸ்கட் போன்ற ஆன்லைன் வினியோக நிறுவனங்கள் மூலமாக வீடுகளுக்கே கொண்டு சென்று விற்க தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாகவும், அதன் சாதக பாதகங்கள் குறித்து ஆன்லைன் வினியோக நிறுவனங்கள், மது உற்பத்தியாளர்கள் போன்றோருடன் கலந்தாய்வு செய்து வருவதாகவும் தி எகனாமிக் டைம்ஸ் நாளிதழ்  செய்தி வெளியிட்டுள்ளது.  இந்த செய்தியில் கூறப்பட்டுள்ள தகவல்கள் உண்மையா? வீடுகளுக்கே சென்று மது விற்க திட்டமிடப்பட்டுள்ளதா? என்பது குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும். ஒருவேளை இந்த செய்தி உண்மையாக இருந்தால் தமிழக அரசின் திட்டம் கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.

வீடுகளுக்கே கொண்டு சென்று மதுவை விற்பனை செய்வது என்பது மக்கள் நலனை விரும்பும் அரசுகளால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத தீமை ஆகும். ஆனால், தமிழக அரசு அத்தகைய தீமையை செய்யாது என்று உறுதியாக கூற முடியவில்லை. அதற்கு காரணம், விளையாட்டு அரங்குகள், பன்னாட்டு நிகழ்வுகள், திருமண விழாக்கள் போன்றவற்றில் மதுவகைகளை வினியோகித்தல், மதுக்கடைகளில் காகிதக் குடுவைகளில் குறைந்த விலையில் மது விற்பனை செய்வது போன்ற புரட்சிகரமான திட்டங்களை அறிமுகம் செய்யத் துடித்த வரலாறு தமிழக அரசுக்கு உண்டு. அதனால்தான் இந்த செய்தியும் உண்மையாக இருக்குமோ? என்று நம்பத் தோன்றுகிறது.

மது, புகையிலை எதுவாக இருந்தாலும் நுகர்வோருக்கு எளிதில் கிடைக்காத வகையில் கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது தான் உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல் ஆகும். அதன் மூலம் தான் மது - புகையிலை ஆகியவற்றின் பயன்பாட்டை குறைக்க முடியும் என்பது உலக சுகாதார நிறுவனத்தின் நம்பிக்கை ஆகும். ஏற்கனவே தெருவுக்குத்தெரு மதுக்கடைகள் திறக்கப்பட்டிருப்பதால் தான் மாணவர்கள் மதுவை வாங்கிச் சென்று பள்ளிகளில் வைத்து அருந்தும் கொடுமை நிகழ்கிறது. வீடுகளுக்கே  மதுவை நேரடியாக கொண்டு வினியோகிக்க அனுமதித்தால் அதனால் ஏற்படும் விளைவுகளை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.

போதை குறைந்த  மது வீடுகளுக்கே நேரடியாக வினியோகிக்கபட்டால், அது வீடுகளில் உள்ள குழந்தைகளையும், பெண்களையும் சுவைத்துப் பார்க்கத் தூண்டும். காலப்போக்கில்  வீட்டில் உள்ள பெண்களையும், பிள்ளைகளையும்  மதுவுக்கு அடிமையாக்கவே இந்த வழக்கம் வழிகோலும். ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே குடிக்கும் முறைக்கு முடிவுகட்டி குடும்பமே மது அருந்தும் கலாச்சாரத்தை உருவாக்கவே வீடு தேடு மதுவை கொண்டு சென்று கொடுக்கும் திட்டம் வழிவகுக்கும்.

தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கை ஏற்படுத்துவோம் என்று வாக்குறுதி  அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மதுப்பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையிலான இத்தகைய திட்டங்களை அனுமதிக்கக் கூடாது.  மது வகைகளை ஆன்லைன் வினியோக நிறுவனங்கள் மூலமாக வீடுகளுக்கே கொண்டு சென்று விற்பனை செய்யும் திட்டம் இருந்தால் அதை தமிழக அரசு கைவிட வேண்டும்; இல்லாவிட்டால் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும்.” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் ஆன்லைன் வினியோக நிறுவனங்கள் மூலமாக வீடுகளுக்கே மதுவை கொண்டு சென்று விற்பது தொடர்பான தகவலை தமிழக அரசு மறுத்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு வெளியிட்டுள்ள பதிவில், “இது முற்றிலும் வதந்தியே; அப்படி ஒரு திட்டமே இல்லை, அது தொடர்பாக பேச்சுவார்த்தைக் கூட நடைபெறவில்லை என டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார். ஆன்லைன் விநியோக நிறுவனங்களால் மதுவை வீடுகளுக்கே கொண்டு சென்று விற்க சில மாநிலங்களில் அனுமதி வழங்கி வருவதால், தமிழ்நாட்டிலும் அனுமதி வழங்க இருப்பதாக தவறான தகவல் பரப்பப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.