எச்.ராஜா சிறைக்கு செல்வது நிச்சயம்: அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை!

மலிவான விளம்பரத்தை பேசி வரும் எச்.ராஜா சிறைக்கு செல்வது நிச்சயம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,

தமிழை அவமதிக்கும் எந்த செயலையும் அனுமதிக்க இயலாது. தமிழ் மொழியை அழிப்பதற்காகவே திராவிடம் என்ற சொல்லை பெரியார் கொண்டு வந்தார் என எச்.ராஜா கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஒருவர் மலிவான விளம்பரத்துக்காக இந்த மாதிரி கூற்றுகளை தயவு செய்து சொல்லக் கூடாது. இதை தமிழ் மக்கள் நம்பக் கூடாது.

எனவே தமிழை அவமதித்து, தமிழை கேவலப்படுத்துகிற எந்த செயலையும் எந்த நிலையிலும் அரசு ஏற்றுக் கொள்ளாது. அது யாராக இருந்தாலும், எவராக இருந்தாலும் சரி, உள்ள பிடிச்சி போட வேண்டிய ஆள்தான் அவர்.

இந்த மாதிரி ஒரு தவறான தகவல் கொடுத்து மக்களை திசை திருப்புகின்ற வேலையில் மக்களை திசை மாற்றி அதன் மூலம் தமிழ்நாட்டில் ஒரு வன்முறை கலாசாரத்தை உருவாக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன். அவர் ஜெயிலுக்கு போவது நிச்சயம். கண்டிப்பாக உள்ளே பிடிச்சு போடுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

jayakumar
இதையும் படியுங்கள்
Subscribe