Advertisment

தலைமைச் செயலாளராக இறையன்பு ஐ.ஏ.எஸ் நியமனம்!

 Irai Anbu IAS appointed as Chief Secretary of Tamil Nadu!

Advertisment

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவெற்றிபெற்றதைத்தொடர்ந்து தமிழகத்தின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இன்று பதவியேற்றுக் கொண்டார். சென்னை ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார். அதேபோல், முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

இந்நிலையில் தமிழக தலைமைச் செயலாளராகஇறையன்பு ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்பொழுது தலைமைச் செயலாளராக இருக்கக் கூடிய ராஜீவ் ரஞ்சன் தமிழ்நாடு செய்தித்தாள் கழகத்துக்கு மாற்றப்பட்டு புதிய தலைமைச் செயலாளராகஇறையன்பு நியமனம் செய்யப்பட்டுள்ளார். 1988 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் பிரிவைச் சேர்ந்தவர் இறையன்பு ஐ.ஏ.எஸ். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இறையன்பு பல புத்தகங்களைஎழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

tn govt Chief Secretary
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe