Advertisment

அரசியல் கட்சிகள் திடீர் போராட்டம்.. கோட்டைவிட்ட உளவுத்துறை!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வரும் நிலையில், தி.மு.க. தலைமையிலான அனைத்துக்கட்சிக் கூட்டம் இன்று நடைபெற்றது.

Advertisment

police

தி.மு.க.வின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 10.30 மணியளவில் தொடங்கிய கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், சி.பி.எம்., சி.பி.ஐ., ம.தி.மு.க., த.மு.மு.க.உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். ஒரு மணி நேர ஆலோசணை கூட்டத்திற்கு பிறகு வெளியில் வந்த தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய மாநில அரசுகளை கண்டித்து வரும் 5ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தார்.

காலை முதலே அறிவாலயத்தில் இருந்த தொண்டர்களிடம் தயாராக இருக்கும் படி சேகர் பாபு சொல்லி வந்ததை பார்க்க முடிந்தது. முன்னதாக ஜெ.அன்பழகன் நள்ளிரவு டிவிட்டரில் போராட்டம் குறித்து பதிவிட்டிருந்தார். தலைவர்கள் பேட்டி கொடுக்கும்போதே வள்ளுவர் கோட்டத்திற்கு செல்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பிய போது எதுவும் சொல்லாமல் காரில் ஏறிவிட்டார். அதன்பின்னர் தலைவர்கள், தொண்டர்கள் என அனைவரும் வாகனங்களில் வள்ளுவர் கோட்டம் நோக்கி தங்களது கார்களில் பறந்தனர்.

Advertisment

police

வள்ளுவர் கோட்டத்தில் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி பெறப்பட்டு இருந்தது. ஆனால், தலைவர்கள் கூட்டம் முடிந்த பின்னர் வள்ளுவர் கோட்டம் செல்வார்கள் என்று உளவுத்துறை எதிர்பார்க்கவில்லை. முதலில் அண்ணா சிலை அருகில் அனைத்துக் கட்சி தலைவர்கள் கோஷம் போட்டு ஆர்பாட்டம் நடத்திக் கொண்டிருக்கும் போது ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் கூடினார்கள். அதன் பின்னர் மு.க.ஸ்டாலின் பேசும்போது தொண்டர்கள் மறியல் செய்து கைதாகும் படி கூறி மீண்டும் ஒரு முறை உளவுத்துறைக்கு அதிர்ச்சி கொடுத்தார். மேடையில் இருந்த தலைவர்கள் மறியல் செய்யாமல் கைதாகவே, அவர்களை ஏற்றிச் செல்ல தயாராக இருந்த வாகனத்தை மறித்து தொண்டர்கள் போராட்டம் நடத்தினர்.

அறிவாலயத்தில் தொடங்கி வள்ளுவர் கோட்ட மறியல் வரை உளவுத்துறை கோட்டை விட்டதால், மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்த காவல்துறை படாதபாடு பட்டனர். இனி தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், அரசுக்கு அலர்ட்டாக மெசேஜ் கொடுக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.

cauvery stalin dmk admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe