Advertisment

ஸ்ரீஜன் மோசடி வழக்கு: இந்தியன் வங்கி தலைமை மேலாளரை கைது செய்த சிபிஐ

பீகார் ஸ்ரீஜன் ஊழல் வழக்கில் தமிழகத்தில் உள்ள இந்திய வங்கியின் மண்டல அலுவலகத்தின் தலைமை மேலாளரை காரைக்குடியில் வைத்து கைது செய்து பீகார் பாட்னாவிலுள்ள சிறப்பு தனி நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய அழைத்து சென்றுள்ளனர் சிபிஐ போலீசார்.

Advertisment

i

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி டிடி நகர்1வதுவீதியிலுள்ளது இந்தியன் வங்கியின் மண்டல அலுவலகம். இதில் தலைமை மேலாளராகப் பணிபுரிபவர் தியோ ஷங்கர் மிஸ்ரா. இதற்கு முன்னதாக பீகார் பாகல்பூர் கோட்வாலியிலுள்ள இந்தியன் வங்கியில் பணிபுரிந்த போது, அரசின் நிதியினைக் கையாண்ட பாகல்பூர் மகளிர் துணை மேம்பாட்டு ஆணையர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆகியோருடைய கணக்கிலிருந்து ரூ.8,79,06,070த்தை பெண்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்கும் மகிலா விகாஸ் சஹியோக் சமிதி லிமிடெட் எனும் அமைப்பிற்கு சட்டவிரோதமாக திருப்பிவிட்டதாக 34, 120-B, 409, 419, 420, 467, 468 & 471பிரிவுகளின் கீழ் வழக்கு ஒன்று (எஃப்ஐஆர் எண் 513 / 2017ம்) ஆண்டில் பதிவானது. பலத்த அதிர்வுகளை உண்டாக்கிய இவ்வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.

i

Advertisment

2004-2013 க்கு இடைப்பட்ட காலத்திலேயே இம்மோசடி நடைப்பெற்றுள்ளதாக கண்டுபிடித்து ஸ்ரீஜன் மஹிலா விகாஸ் சஹயோக் சமிதி, அதன் அலுவலர்கள் மற்றும் வங்கி மேலாளர்கள் மற்றும் நிலம் கையகப்படுத்தும் அதிகாரிகள் உட்பட பலர் மீது பல வழக்குகளை பதிவு செய்த சிபிஐ தொடர்ந்து ஆதாரங்களை திரட்டி வந்தது.

இந்நிலையில், இவ்வழக்கிலுள்ள வங்கி அதிகாரி தியோ ஷங்கர் மிஸ்ரா- தற்பொழுது சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலுள்ள மண்டல அலுவலகத்தில் தலைமை மேலாளராக பணியாற்றிய நிலையில் எஸ்.ஐ. தேவேஷ் குமார் தலைமையிலான டெல்லி சிபிஐ டீம் அவரை கைது செய்து பீகாருக்கு அழைத்து சென்றது. இதனால் வங்கி வட்டாரத்தில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.

indian bank
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe