/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/virat (3).jpg)
துபாயில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு டி20 கேப்டன் பதவியைத் துறக்கிறார் விராட்கோலி.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "நீண்ட ஆலோசனைக்கு பிறகே டி20 கேப்டன் பொறுப்பைத் துறக்கும் முடிவை எடுத்தேன். தொடர்ந்து பல ஆண்டுகளாக அதிக பணிச்சுமை ஏற்பட்டதால் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுகிறேன். பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ரோஹித் ஷர்மாவுடன் தீவிரமாக ஆலோசித்தப் பிறகே முடிவெடுத்துள்ளேன். பொறுப்பில் இருந்து விலகும் முடிவை பி.சி.சி.ஐ.யின் தலைவர் சவுரவ் கங்குலி, பி.சி.சி.ஐ.யின் செயலாளர் ஜெய்ஷா ஆகியோரிடம் கூறிவிட்டேன். டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்த டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன். டி20 கிரிக்கெட் போட்டிகளில் பேட்ஸ்மேனாகத் தொடர்ந்து விளையாடுவேன்" என்று அறிவித்துள்ளார்.
விராட்கோலியின் இந்த அதிரடி அறிவிப்பால், அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)