Important Announcement on Attention Group 2, Group 2A Candidates

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பப் போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன்படி, டி.என்.பி.எஸ்.சி குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உள்ளிட்ட தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்கான தேதியை கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்டது.

Advertisment

அதில், 90 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு ஜூலை 13ஆம் தேதி நடைபெறும். 29 பணியிடங்களுக்கான குரூப் 1-B மற்றும் குரூப் 1-C தேர்வு ஜூலை 12ஆம் தேதி நடைபெறும். 2,030 காலி பணி இடங்களுக்கான குரூப்-2, குரூப்- 2ஏ தேர்வு வரும் செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறும். அதே போல், டிப்ளமோ/ ஐடிஐ அளவில் 730 பணியிடங்களுக்கான தொழில்நுட்பப்பிரிவு தேர்வுகள் வரும் நவம்பர் 17ஆம் தேதி நடைபெறும்’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தை மாற்றியுள்ளதாகத் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது.

Advertisment

இந்த நிலையில், குரூப் 2, குரூப் 2ஏ பிரிவில் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் விண்னப்பதாரர்கள் இன்று (20-06-24) தொடங்கி அடுத்த மாதம் 19ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் கட்டணம் செலுத்துவதற்கும் 19ஆம் தேதிநிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு வரும் செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இந்தத்தேர்வு செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெறவுள்ளது. கூடுதல் விவரங்களை அறிய https://www/tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.