Advertisment

’திருமணத்திற்கு பிறகு வேறு ஆணுடன் உறவு வைப்பது குற்றமில்லை’ - உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

k

ஆண் - பெண் இடையேயான கள்ள உறவு கிரிமினல் குற்றமில்லை என்றும், திருமணமான பெண் வேறு யாருடனும் கள்ள உறவு வைத்திருந்தால் அது குற்றமில்லை என்றும் உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

Advertisment

கள்ள உறவு தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றத்தில் தீபக் மிஸ்ரா உள்ளிட்ட 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தனர். இந்த 5 பேரில் 3 பேர் கள்ள உறவுக்கு ஆதரவு அளித்து தீர்ப்பளித்தனர்.

Advertisment

வயது வந்த ஆண் - பெண் இடையேயான கள்ளத்தொடர்பு கிரிமினல் குற்றமாகாது. கள்ள உறவால் விவகாரத்து நடக்கலாம். ஆனால், கள்ள உறவினால் யாரும் தற்கொலைக்கு தூண்டப்படாத வரையில் குற்றமில்லை. தற்கொலைக்கு தூண்டப்பட்டால் மட்டுமே அது கிரிமினல் குற்றமாகும் என்று தீர்ப்பில் கூறினர்.

ka

திருமணமான பெண்ணுடன் வேறு ஆண் கள்ள உறவில் ஈடுபடுவது சட்டப்பிரிவு 497 -ன் படி குற்றம் எனக்கருதி அந்த ஆணுக்கு மட்டும் 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வேண்டும் என்பது விரோதமானது. அதனால், இந்திய தண்டனை சட்டப்பிரிவு 497 அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று கூறி, 497 சட்டப்பிரிவை ரத்து செய்து பரபரப்பு தீர்ப்பு வழங்கினர். கள்ள உறவு விவகாரத்தில் ஆண்களுக்கு இருப்பது போல பெண்ணுக்கும் சமமான தண்டனை வழங்கக்கோரிய வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

ஒரு பெண்ணுடைய எஜமானராக கணவரை ஒருபோதும் கருத முடியாது. ஆணுக்கு சமமாக பெண்ணையும் நடத்த வேண்டும் என்று தலைமை நீதிபதி இந்த தீர்ப்பில் குறிப்பிட்டார்.

kalla uravu Supreme Court
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe