Advertisment

ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

IAS officers job transfer!

Advertisment

தமிழ்நாட்டில் 12 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டுள்ள உத்தரவில், ‘திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக பொறுப்பு வகித்து வந்த முருகேஷ் வேளாண்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். தென்காசி மாவட்ட ஆட்சியராக இருந்த ரவிச்சந்திரன் உயர்க்கல்வித்துறை துணைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். விவசாய சந்தைப்படுத்தல் மற்றும் விவசாய வணிக இயக்குநராக பொறுப்பு வகித்து வந்த நடராஜன் ஐஏஎஸ், வருவாய் நிர்வாகத்துறை கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வருவாய் நிர்வாக முதன்மைச் செயலராக இருந்த பிரகாஷ் ஐஏஎஸ், வேளாண் வணிகத்துறை முதன்மைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரி லட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார். வேலூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பு வகித்து வந்த குமரவேல் பாண்டியன், தோட்டக்கலைத்துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

மேலும், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக இருந்த பாஸ்கர பாண்டியன், திருவண்ணாமலை ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். வேலூர் மாவட்ட ஆட்சியராக சுப்புலட்சுமியை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக அருண்ராஜ் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், சேலம் மாவட்ட ஆட்சியராக பிருந்தா தேவியை பணியிட மாற்றம் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக கற்பகராஜ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்ட ஆட்சியராக கமல்கிஷோரை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ias
இதையும் படியுங்கள்
Subscribe