Advertisment

’காவேரி மருத்துவமனையில் கலைஞரை பார்த்தேன்!’ - வெங்கையா நாயுடு(படங்கள்)

திமுக தலைவர் கலைஞர் உடல்நிலம் குறித்து நேரில் விசாரிப்பதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு இன்று காலை சென்னை வந்தார். விமான நிலையத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து, பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.

Advertisment

v6

12.30 மணிக்கு மேல் காவேரி மருத்துவமனைக்கு வந்தார் வெங்கய்ய நாயுடு. மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில அமைச்சர் ஜெயக்குமாரும் உடன் வந்தனர்.

v2

Advertisment

கனிமொழி, ஸ்டாலின் ஆகியோரிடம் கலைஞரின் உடல் நலம் குறித்தும், அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் கேட்டு அறிந்த வெங்கைய்யா காரில் புறப்பட்டுச்சென்றார்.

v3v4

வெங்கைய்யாவின் வருகையை முன்னிட்டு காவேரி மருத்துவமனை வளாகம் முழுவதும் காலைமுதற்கொண்டே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. கலைஞரின் குடும்ப உறுப்பினர்கள் சிலரின் கார்களை தவிர மற்றவர்களின் கார்கள் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இந்த சந்திப்பு குறித்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள வெங்கைய்யா நாயுடு, கலைஞரை நேரில் பார்த்ததாக குறிப்பிட்டுள்ளார்.

vt

cauvery hospital kalaignar venkaiya naidu
இதையும் படியுங்கள்
Subscribe