kamal ramanathapuram

Advertisment

நடிகர் கமல்ஹாசன் இன்று மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் நடைபெற உள்ள பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் தனது கட்சியின் பெயர், கொடி, கொள்கைகளை அறிமுகம் செய்ய உள்ளார். முன்னதாக இன்று காலை ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல்கலாம் இல்லத்தில் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். அதன் பின் அப்துல்கலாம் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியவர் அங்கிருந்து கார் மூலமாக மண்டபம், உச்சப்புளி, இராமநாதபுரம் பாரதிநகர் ஆகிய இடங்களில் பொதுமக்களை சந்தித்தார்.

அதன் பின்பு இராமநாதபுரம் அரண்மனை முன்பாக போடப்பட்டிருந்த மேடையில், என்னை சினிமா நட்சத்திரமாக பார்த்திருகொண்டிருந்தீர்கள். இனி என்னை உங்கள் வீட்டு விளக்காக பார்த்து கொள்ளுங்கள் என்றார். நான் 45 ஆண்டுகள் கழித்து இராமநாதபுரம் மாவட்ட மக்களை சந்திப்பது ஆனந்தமே, இராமநாதபுரம் மாறியிருக்கிறது, ஆனால் மக்கள் மனதிலிருந்து நான் அப்படியே இருக்கிறேன் என்றார்.

பாலாஜி