மதிமுகவின் 26வது பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் இன்று நடந்து வருகிறது. திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டது போல தமிழ் நாட்டில் பெரியார் சிலைகள் அகற்றப்படும் என பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராசா பேசியதை மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் கவனத்திற்கு கட்சியினர் கொண்டு சென்றனர்.
இதைக் கேட்டு உணர்ச்சிப் பிழம்பான வைகோ,
தந்தை பெரியார் சிலைகளை அகற்றுகிறாயா? பெரியார் பிறந்த மண்ணில் வாழ்ந்து கொண்டு என்ன ஆணவப் பேச்சு.. எச்.ராஜா நீங்கள் பெரியார் சிலையை அகற்ற எங்கு வருகிறீர்கள் சொல்லுங்கள், திருச்சியானாலும் சென்னையானாலும் சரி. நாங்கள் தயார்.! பெரியார் சிலையை அகற்ற உங்க மோடியின் முப்படைகளுடன் வந்தாலும் சரி இது அரிவாள் பிடித்த கை... அடித்து விரட்டுவோம். நாள் குறித்து விட்டு வா. கை, கால்களை துண்டாக்குவோம்.. " என ஆவேசமாக பேசினார் வைகோ.