Skip to main content

கடும் எதிர்ப்பு - முகநூலில் இருந்து சர்ச்சை பதிவை நீக்கினார் எச்.ராஜா!

Published on 06/03/2018 | Edited on 06/03/2018

திரிபுரா மாநிலம் பெலோனியா பகுதியில் உள்ள கல்லூரி சதுக்கப் பகுதியில் சி.பி.எம். ஆட்சியில் வைக்கப்பட்ட ரஷ்யப் புரட்சியாளர் விளாதிமிர் லெனினின் சிலையை பாஜகவினர் இடித்துத் தள்ளினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இன்று காலை பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா தன் முகநூல் பதிவில்,
 
லெனின் யார் அவருக்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு? கம்யூனிசத்தின்கும் இந்தியாவிற்கும என்ன தொடர்பு? லெனின் சிலை உடைக்கப்பட்டது திரிபூராவில். இன்று திரிபூராவில் லெனின் சிலை, நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈவேரா ராமசாமி சிலை. இவ்வாறு அவர் முகநூல் பதிவில் கருத்து தெரிவித்திருந்தார்.

எச்.ராஜாவின் இந்த பதிவுக்கு அனைத்து கட்சியினர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் எச்.ராஜாவை கைது செய்ய வேண்டும், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், பெரியார் சிலை உடைக்கப்படும் என்ற சர்ச்சை பதிவை முகநூலில் இருந்து எச்.ராஜா தற்போது நீக்கியுள்ளார்.

முன்னதாக இதேபோல், திரிபுராவில் நடந்ததைப் போல தமிழகத்திலும் நடக்குமா? என்று முகநூல் வாக்குப்பதிவை தொடங்கினார். அதிலும் பாஜகவுக்கு எதிராக வாக்குகள் பதிவாகவே அந்த வாக்குப்பதிவையும் எச்.ராஜா தன் முகநூலில் இருந்து நீக்கியது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்