Advertisment

வீட்டு சிறையில் வைத்தாலும் போராட்டம் தொடரும் - அய்யாக்கண்ணு பேட்டி 

Advertisment

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் 100க்கும் அதிகமான விவசாயிகள் இன்று தங்களுடைய போராட்டத்தை நடத்த டெல்லிக்கு புறப்பட்ட நிலையில் அவர்களை வீட்டிற்குள் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த போராட்டம் குறித்து பேசிய தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு, ''டெல்லியில் இயற்றப்பட்ட 3 வேளாண் சட்டத்தில் விவசாயிகள்நீதிமன்றத்திற்கு செல்ல முடியாது படி சட்டம் இயற்றி உள்ளனர். விவசாயிகளிடம் எந்தவித ஆலோசனையும் கேட்காமல் இந்த சட்டம் நிறைவேற்றப்படுள்ளது. கார்பரேட் நிர்ணயிக்கும் விலை மட்டுமே வாங்கவும், விற்கவும் முடியும் குத்தகைதாரர்கள் முற்றிலும் அழிக்கபடுவார்கள் மரபணு மாற்றபட்ட விதைகளை ஊக்கபடுத்தி விவசாயம் செய்ய ஊக்கபடுத்துவதை இந்த சட்டம் வலியுறுத்துகிறது.

எனவே இந்த சட்டத்தினை கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்த திட்டமிட்டு புறப்பட தயாராக இருந்த விவசாயிகளாகிய எங்களை காவல்துறை வீட்டு காவலில் வைத்துள்ளது. எங்களுடைய போராட்டம் ஓயப்போவதில்லை'' என்றார் உறுதியாக. மேலும் கரூர் சாலையில் விவசாயிகள் படுத்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Farmers Protest house arrested Ayyakannu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe