/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_4987.jpg)
மாமல்லபுரம் கடற்கரையில் அமைந்துள்ள பல்லவ கால வரலாற்றுச்சிற்பங்களைக் காண்பதற்கு ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா மாகாண சபாநாயகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 8 பேர் தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
ஜப்பான் நாட்டின், ஹிரோஷிமா மாகாண சபாநாயகர் நகமோட்டோ டகாஷி தலைமையில், தமிழ்நாட்டிற்கு வந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் 8 பேருக்கும் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இவர்கள் மாமல்லபுரம் கடற்கரைக்கு வந்தபோது அங்கு தமிழ்நாட்டில் பாரம்பரிய கலையான கரகாட்டம் நடனம் ஆட்டம் ஆடப்பட்டது.
அப்போது, ஹிரோஷிமா மாகாண சபாநாயகர் மற்றும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஆகிய இருவரும்,கரகாட்ட இசையை ரசித்து கரகாட்ட கலைஞர்களுடன் சேர்ந்து அவர்களும் கரகாட்டம் ஆடினர். இதனை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். இது தற்போது வைரலாகி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)