Advertisment

காலாவதியான கவுன்சிலைக் கருத்தில் கொண்டு வழங்கப்பட்ட தீர்ப்பு! எங்களை கட்டுப்படுத்துமா? - வினா எழுப்பும் இயன்முறை மருத்துவர்

பிஸியோதெரபிஸ்ட்கள் எனப்படும் இயன்முறை மருத்துவர்கள் தங்கள் பெயருக்கு முன்னாள் டாக்டர் என்று போட்டுக்கொள்ளக்கூடாது என்று இந்திய மருத்துவக் கவுன்சில் தொடர்ந்த வழக்கில் நேற்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Advertisment

Court

2008ஆம் ஆண்டு வெளியான ஓர் அரசாணையை அடிப்படையாய்க் கொண்டு மருத்துவர்களின் கவுன்சில் தொடர்ந்த வழக்கின், இந்தத் தீர்ப்பு சில அதிர்வலைகளை ஏற்படுத்தி அலோபதி மருத்துவர்கள் மற்றும் இயன்முறை மருத்துவர்களுக்கு நடுவே பிரச்சனைகளை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

Advertisment

இந்தத் தீர்ப்பு குறித்து இயன்முறை மருத்துவர் டேனியல் ராஜசுந்தரம் நம்மிடம் கூறுகையில்,

இது 2008ஆம் ஆண்டு தொடரப்படுவதாக இருந்த கவுன்சில் சார்ந்த வழக்கு. ஆனால், இன்றுவரை Courtபிஸியோதெரபிஸ்ட்களுக்கென்று ஒரு கவுன்சில் அமையவே இல்லை. நாங்கள் யாரும் அவர்கள் வழக்குத் தொடர்ந்த கவுன்சிலின் உறுப்பினர்களும் அல்ல. மேலும், டாக்டர் என்ற முற்சேர்க்கை என்பது ஆய்வு செய்து Ph.D பட்டம் வாங்கும் பட்டதாரிகளுக்கும், கவுரவ பட்டம் வாங்குவோர்களுக்கும் மட்டுமே உரியது. இதுவே உலகளாவிய நடைமுறையில் இருக்கும் செயல்பாடு. இந்தியாவில்கூட எந்த மருத்துவர்களின் பட்ட சான்றிதழிலும், டாக்டர் என்ற முற்சேர்க்கை கிடையாது. மருத்துவம் பார்ப்போர் தங்கள் தொழில்பெயராக டாக்டர் என்று போடுவது நடைமுறை வழக்கமாக உள்ளது அவ்வளவே. பிற மாற்று மருத்துவர்களும் தங்களை டாக்டர் என்ற முற்சேர்க்கையோடே சொல்லிக்கொள்கின்றனர். அப்படியிருக்க இந்த அலோபதி மருத்துவர்களுக்கு ஏன் பிஸியோதெரபிஸ்ட்களான எங்கள் மேல் மட்டும் இத்தனை வன்மம் என்றால், அவர்கள் அறுவைசிகிச்சைக்கு நோயாளிகளை உள்ளாக்கும் பல நோய்களுக்கு இயன்முறை மருத்துவர்களான நாங்கள் மருந்தில்லா சிகிச்சை முறையிலும், பயிற்சி முறையிலுமே சரியான சிகிச்சையை கொடுத்து நோய்களைக் குணப்படுத்துகிறோம். எனவே, இப்போதெல்லாம் பொதுமக்கள் எங்களிடமே சிகிச்சைக்கு வர விளைகின்றனர். இதனால், ஏற்படும் காழ்ப்புணர்ச்சிதான் அவர்களை, அவர்கள் சாராத இயன்முறை மருத்துவத்துறையோடு போட்டியிட வைக்கிறது.

மேலும் அவர், ‘நம் தமிழ்நாட்டில் பிசியோதெரபிக்கு என்று தனி கவுன்சில் இதுவரை அமைக்கப்படவில்லை. அப்படி ஒரு கவுன்சில் அமைய முன்னெடுத்துவரும் போராட்டங்களும் அதிகம். அரசை, பிசியோதெரபி கவுன்சில் அமைக்கவிடாமல் செய்வதிலும் அலோபதி மருத்துவர்களின் பங்கு உண்டென்று சந்தேகிக்கிறேன் நான். இதே இந்தியாவில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் பிசியோதெரபி படித்து சிகிச்சையளிக்கும் பிசியோதெரபிஸ்ட்கள் தங்கள் பெயருக்கு முன் டாக்டர் என்றே போட்டுக்கொள்ளுகின்றனர். பிரதமர் மோடி பிறந்து, முதல்வராய் இருந்த குஜராத்திலும் அப்படியே. பின் ஏன் தமிழக பிசியோதெரபிஸ்ட்கள் மேல் மட்டும் இத்தனை குரோதம் இருக்கவேண்டும்? எனவே எங்களுக்கென்று ஒரு தன்னாட்சியான பிரத்யேக பிசியோதெரபி கவுன்சில் ஒன்றை அமைக்கவேண்டியது தமிழக அரசின் கடமை. இந்தத் தீர்ப்பைப் பொறுத்தவரை அமையாத ஒரு கவுன்சில் சார்ந்த தீர்ப்பு அது என்பதால், காலாவதியான கவுன்சிலைக் கருத்தில் கொண்டு வழங்கங்கப்பட்ட தீர்ப்பாகிவிடுகிறது.அதுஎங்களை எப்படிகட்டுப்படுத்தும்? என கேள்வி எழுப்பினார்.

மேலும், அவர் மஹாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களின் பிசியோதெரபி கவுன்சில், அங்குள்ள பிசியோதெரபிஸ்ட்களுக்கான டாக்டர் முற்சேர்க்கையுடனான அடையாள அட்டை ஆகிய ஆதாரங்களையும் முன்வைக்கிறார்.

allopathy high court physiotherapy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe