Advertisment

பாஜகவுடன் கூட்டணியும் இல்லை. ஆதரவும் இல்லை என்று சட்டப்பேரவையில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சட்டப்பேரவையில் பேசிய திமுக எம்எல்ஏ பிச்சாண்டி, காவிரி விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல் பாஜகவும், அதிமுகவும் நட்பு பாராட்டுகிறார்கள் என குறிப்பிட்டார்.

அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, காவிரி மேலாண்மை வாரியத்திற்காக நாடாளுமன்றத்தை அதிமுக முடக்கி வருகிறது. தமிழக உரிமைக்காக நாடாளுமன்றத்தில் அதிமுக போராடி வருகிறது. திமுகவை போல் மத்திய அரசில் அதிமுக பங்கு வகிக்கவில்லை. காவிரியில் நீர் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மத்திய அரசு மீது கொண்டுவரப்படும் நம்பிக்கை இல்லா தீர்மானம் காவிரிக்காக இல்லை. இவ்வாறு கூறினார்.