Skip to main content

கோவை விபத்து! - ஓட்டுநர் மது அருந்தியதாக ஒப்புதல்!

Published on 02/08/2018 | Edited on 02/08/2018


கோவையில் நேற்று அதிவேகமாக சென்ற சொகுசு கார் ஏற்படுத்திய விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த வழக்கில், கார் ஓட்டுநர் ஜெகதீசன் மதுஅருந்தியதாக ஒப்புதல் அளித்துள்ளார்.

கோவை பொள்ளாச்சி சாலையிலுள்ள சுந்தராபுரம் ஐயர் மருத்துவமனை அருகே நேற்று காலை அதிவேகமாக சென்ற ஆடி சொகுசு கார் ஒன்று சாலையோரம் பேருந்துக்காகக் காத்திருந்த பொதுமக்கள் 10 பேர் மீது மோதி, பின்னர் அங்கு நின்றிருந்த ஆட்டோ மீது மோதியது. இதில் பேருந்துக்காக காத்திருந்த ஏழு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். ஆட்டோவும் அப்பளம் போல் நசுங்கியது.
 


இதனை நேரில் பார்த்த பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். ஆடி காரை ஒட்டி வந்தவரை பொதுமக்கள் சூழ்ந்து அடித்து துவைத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கோவை ஈச்சனாரியிலுள்ள ரத்தினம் கல்லூரியின் உரிமையாளரின் கார் எனத்தெரிய வந்தது.

காரை ஒட்டி வந்த ஜெகதீஷ் மயக்கம் ஏற்பட்டு கார் தனது கட்டுப்பாட்டை இழந்ததாக கூறினார். இதையடுத்து,பொதுமக்கள் தர்ம அடி கொடுத்ததில் அவர் படுகாயம் அடைந்தார். காயமைடந்தவருக்கு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று போலீசாரின் விசாரணையில், மருத்துவர்கள் முன்னிலையில் கார் ஓட்டுநர் ஜெகதீசன் மது அருந்தியதாக ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, மது அருந்தியதற்கான சான்றிதழ்கள் பெறப்பட்டது. மேலும் ஓட்டுநர் ஜெகதீசனின் ரத்தமாதிரி பரிசோதனை வந்தவுடன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்