தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவருடன் அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ ஆகியோரும் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து நலம் விசாரித்தனர்.
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22ஆம் தேதி போராட்டம் நடைப்பெற்றது. அப்போது ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில், போராட்டக்காரர்களுக்கு காவல்துறையினருடன் மோதல் ஏற்பட்டதன் காரணமாக கல் வீச்சு, கண்ணீர் புகை, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டன. அதில் போராட்டக்காரர்கள் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், தடியடி, துப்பாக்கிச் சூட்டில் காயமைடைந்து 52 பேர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். முன்னதாக நேற்று மருத்துவமனை சென்று ஆறுதல் கூற சென்ற அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் மக்கள் ஆவேசமாக கேள்விகளை எழுப்பியுள்ளனர். ஸ்டெர்லைட்டை நிரந்திரமாக மூட கையெழுத்து போட்டுத்தர தயாரா? என அவரிடம் சரமாரி கேள்விகளை எழுப்பினர். இதற்கு பதிலளிக்க முடியாத அமைச்சர் அங்கிருந்து உடனடியாக கிளம்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.