Skip to main content

நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் அதிரடி உத்தரவு - உயர்மட்ட விசாரணைக்கு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி நியமனம்

Published on 16/04/2018 | Edited on 16/04/2018
santhanam

 

பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானத்தை நியமித்து உயர்மட்ட விசாரணைக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார்.

 

விருதுநகர் அருப்புக்கோட்டையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்குட்பட்ட அரசு நிதி உதவி பெறும்  தேவாங்கர் கலைக்கல்லூரியில் கணித துறை உதவி பேராசிரியையாக பணிபுரிந்து வருபவர் நிர்மலாதேவி (வயது46). இவர் தன்னிடம் படிக்கும் மாணவிகள் 4 பேரிடம் பல்கலைக்கழக உயர் அதிகாரிகளுக்கு பாலியல் ரீதியாக ஒத்துழைப்பு தரும்படி போனில் வற்புறுத்திய ஆடியோ சமீபத்தில் வெளியானது.

 

இது சமூக வலைதளங்களில் பரவியதால் தமிழக கல்வித்துறை வரலாற்றில் பெரும் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் பூதாகரமாக வெடித்துள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் கொடுத்த புகாரின்பேரில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. முதல் கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில் பேராசிரியையாக நிர்மலாதேவி சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

 

கல்லூரி நிர்வாகம் சார்பில் போலீசில் புகாரளிக்கப்பட்டதை அடுத்து,  பேராசிரியர் நிர்மலா தேவி மீது 3 பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். மேலும்  நிர்மலா தேவி கைது செய்ய இன்று மதியம்  சென்றபோது, வீட்டை உள் பக்கமாக பூட்டிக்கொண்டுவிட்டார். இதனால் போலீசார் அவரை கைது செய்ய பல கட்ட முயற்சிகள் எடுத்து வந்தனர்.  நீண்ட போராட்டத்திற்கு பின்னர் நிர்மலாதேவியின் கணவர் மற்றும் அவரது சகோதரர் உதவியுடன் மாலை 6.30 மணிக்கு மேல் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று நிர்மலாதேவியை போலீசார் கைது செய்தனர்.

 

santhanam1

 

இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆர்.சந்தானம் நியமிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.  சந்தானம் விரைவில் விசாரணையை தொடங்கவிருக்கிறார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

8 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்; தமிழக அரசு உத்தரவு

Published on 14/02/2024 | Edited on 14/02/2024
Tamil Nadu Govt order Transfer of 8 IAS officers

சமீப காலமாகப் பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில், அண்மையில் தமிழ்நாடு முழுவதும் 6 மாவட்ட ஆட்சியர் உள்பட 14 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், தற்போது 8 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், ‘மாநில மனித உரிமைகள் ஆணைய செயலாளராக ஏ. சுகந்தி ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மற்றும் உள்துறை இணைச் செயலாளராக எஸ்.பி. அம்ரித் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், வணிகவரித்துறை இணை ஆணையராக (நிர்வாகம்) பி. ரத்தினசாமி ஐ.ஏ.எஸ், தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று இணை மேலாண் இயக்குநராக ஆனந்த் மோகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இதனிடையே, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராக நிஷாந்த் கிருஷ்ணா ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி மாநகராட்சி ஆணையராக வி. சரவணன் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை பெருநகர மாநகராட்சி கூடுதல் ஆணையராக (சுகாதாரம்) வி. ஜெயச்சந்திர பானு ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மற்றும் திட்ட அதிகாரியாக வீர்பிரதாப் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

Published on 27/01/2024 | Edited on 27/01/2024
IAS officers job transfer!

தமிழ்நாட்டில் 12 ஐஏஎஸ் அதிகாரிகள்  பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

இது குறித்து தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டுள்ள உத்தரவில், ‘திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக பொறுப்பு வகித்து வந்த முருகேஷ் வேளாண்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். தென்காசி மாவட்ட ஆட்சியராக இருந்த ரவிச்சந்திரன் உயர்க்கல்வித்துறை துணைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். விவசாய சந்தைப்படுத்தல் மற்றும் விவசாய வணிக இயக்குநராக பொறுப்பு வகித்து வந்த நடராஜன் ஐஏஎஸ், வருவாய் நிர்வாகத்துறை கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வருவாய் நிர்வாக முதன்மைச் செயலராக இருந்த பிரகாஷ் ஐஏஎஸ், வேளாண் வணிகத்துறை முதன்மைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரி லட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார். வேலூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பு வகித்து வந்த குமரவேல் பாண்டியன், தோட்டக்கலைத்துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

மேலும், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக இருந்த பாஸ்கர பாண்டியன், திருவண்ணாமலை ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். வேலூர் மாவட்ட ஆட்சியராக சுப்புலட்சுமியை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக அருண்ராஜ் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், சேலம் மாவட்ட ஆட்சியராக பிருந்தா தேவியை பணியிட மாற்றம் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக கற்பகராஜ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்ட ஆட்சியராக கமல்கிஷோரை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.