சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு நேரில் சென்ற நடிகர் கமல்ஹாசன், தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை சந்தித்தார்.
நடிகர் கமல்ஹாசன் வருகிற 21-ந் தேதி தனது புதிய கட்சியை அதிகாரப்பூர்வமாக தொடங்கி, அன்றைய தினமே அவர் தனது கட்சியின் கொடியையும் அறிமுகம் செய்யவிருக்கிறார். இதை முன்னிட்டு முக்கிய தலைவர்களை கமல்ஹாசன் சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார். முன்னதாக கம்யூனிஸ்ட் கட்சி்யின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவை சந்தித்து வாழ்த்து பெற்றார். இதையடுத்து நேற்று காலை, நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தார். பின்னர் நேற்று இரவு, சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கலைஞரை நேரில் சென்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/WhatsApp Image 2018-02-19 at 12.19.39.jpeg)
இந்நிலையில், இன்று காலை சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு நேரில் சென்ற நடிகர் கமல்ஹாசன், தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
எனது அரசியல் பயணத்திற்கு அரசியலில் மூத்தவரான விஜயகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றேன்.சகோதரர் விஜயகாந்தை சந்தித்து நீண்ட நாட்கள் ஆவதால் நேரில் சந்திக்க வந்தேன். திராவிட அரசியலை பின்பற்றி வெற்றி பெற்று காட்டுவேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Follow Us