பிளே ஸ்டோரில் இருந்து 'Paytm' நீக்கம்!

google play store patym app removed

பணப்பரிமாற்ற செயலியான 'பேடிஎம் செயலி' (Paytm App) கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது. விதிமீறல் காரணமாக பேடிஎம் செயலி கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ள 'பேடிஎம்' நிறுவனம், "வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாப்பாக இருக்கும். தற்காலிகமாக நீக்கப்பட்ட பேடிஎம் செயலி மீண்டும் கூகுள் பிளே ஸ்டோரில் சேர்க்கப்படும்" என்று தெரிவித்துள்ளது.

கூகுள் பிளே ஸ்டோரில் பேடிஎம் செயலியை புதிதாக டவுன்லோடு செய்யவோ, அப்டேட் செய்யவோ முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

google play store paytm
இதையும் படியுங்கள்
Subscribe