Former Minister K.P. Anbazagan appears in court

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் நீதிமன்றத்தில்ஆஜரான நிலையில் வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Advertisment

கடந்த அதிமுக ஆட்சியில் உயர்கல்வி துறை அமைச்சராக இருந்தவர் கே.பி. அன்பழகன். இதனையடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு இருவருக்குச் சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ஆட்சியிலிருந்த போது வருமானத்திற்கு அதிகமாக 45.20 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் இவர் மீதும், இவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் தர்மபுரி குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக 10000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

Advertisment

இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்காக தர்மபுரி நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன், தனபால் உள்ளிட்ட 11 ஆஜரானார்கள். இதனையடுத்து வழக்கு விசாரணையை டிசம்பர் 8 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.