Skip to main content

“கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவித்திட வேண்டும்” - முதல்வர் மு.க.ஸ்டாலின்

Published on 28/10/2023 | Edited on 30/10/2023

 

The fishermen should be released says CM MK Stalin

 

மாலத்தீவு கடலோரக் காவல் படையினரால் கடந்த 23 ஆம் தேதி (23.10.2023) கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (28.10.2023) கடிதம் எழுதியுள்ளார்.

 

இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் மீன் இறங்கு தளத்தில் இருந்து, 01.10.2023 அன்று, IND-TN-12-MM-6376 பதிவு எண் கொண்ட விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற 12 மீனவர்கள், 23.10.2023 அன்று தினாது தீவு அருகே மாலத்தீவு கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே உரிய தூதரக நடவடிக்கைகள் மூலம், மாலத்தீவு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கைது செய்யப்பட்டுள்ள 12 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவித்திட வேண்டும்” என தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்