Advertisment

ஐயோ பாவம்..! பொன்.ராதாவை ஒருவகை கற்பனை நோய் ஆட்டிப்படைக்கிறது: நமது அம்மா கிண்டல்!

pon

பொன்.ராதாவுக்குள் ஒருவகை கற்பனை நோய் புகுந்து கொண்டு அவரை ஆட்டிப்படைக்கிறதோ என்னவோ என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குறித்து நமது அம்மா நாளிதழ் கிண்டல் செய்துள்ளது.

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

Advertisment

முன்னதாக திமுகவும், அதிமுகவும் கூட்டணி வைத்திருக்கிறது என்றும் தமிழ்நாட்டில் நக்சலைட், மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் இருக்கிறது என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருந்தார்.

இந்நிலையில், இதுகுறித்து நமது அம்மா நாளிதழ், கண் கொண்டு நோக்காது.. கற்பனைக்கும் பூக்காது என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள கவிதையில்,

தமிழ்நாட்டில் நக்சலைட், மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் இருக்கிறது என்று சமீப காலங்களில் பொன்.ராதா கிருஷ்ணன், நிறையவே உண்மையற்ற காமெடிகளை அள்ளி விடுகிறார். இதைவிட உச்சமாக திமுகவும், அதிமுகவும் கூட்டணி வைத்திருக்கிறது என்று புதுக்கதை அளந்து விட்டு புல்லரிக்க வைத்துள்ளார். மோடியை கோபாலபுரம் அழைத்துச் சென்று கலைஞரின் உடல்நலம் குறித்து விசாரித்து வருகிற அளவுக்கு ஏற்பாடுகளை செய்கிற பொன்.ராதா அதிமுக மீது இதுபோல் உண்மையற்ற அவதூறு பரப்புவது அழகல்ல.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

ஒருவேளை எதிர்காலத்தில் காங்கிரசுடன் பாஜக கூட்டணி வைத்துக் கொள்வதற்கு கூட வாய்ப்பு வந்தாலும் வருமே தவிர, ஒரு நாளும் திமுகவை அதிமுக கண்கொண்டும் பார்க்காது.

இதுபோல, சாத்தியமில்லாத சங்கதிகளை நினைத்துப் பார்க்கிற ஒருவகை கற்பனை நோய் பொன்.ராதாவுக்குள் புகுந்து கொண்டு அவரை ஆட்டிப்படைக்கிறதோ என்னவோ.. ஐயோ பாவம்.. என அதில் கூறப்பட்டுள்ளது.

admk Ponradhakrishnan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe