ADVERTISEMENT

கன்னத்தைத் தொட்ட ஆளுநர்... பதிலடி கொடுத்த நிருபர்...!

11:09 PM Apr 17, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று மாலை சென்னை ராஜ்பவனில் செய்தியாளர்களை சந்தித்தார். இச்சந்திப்பில் பேராசிரியை நிர்மலா தேவியின் விவகாரம் குறித்தும் அந்த விவகாரத்தில் ஆளுநர் பெயர் அடிபடுவது குறித்தும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு கோபம் அடைந்த ஆளுநர், நிர்மலா தேவியின் முகத்தை இதுவரை பார்த்தது இல்லை. அவர் யார் என்றே எனக்கு தெரியாது. எனக்கு 78 வயது ஆகிறது. என்னைப்பற்றி தவறான கருத்துக்களை பேச வேண்டாம்’’ என்று கூறினார்.

ADVERTISEMENT

ஆனால், பேட்டி முடியும் தருவாயிலும், சில நிருபர்கள் நிர்மலா தேவி விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது பெண் நிருபர் லட்சுமி சுப்பிரமணியம் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்காமல், ’’நீங்கள் என் பேத்தி மாதிரி என்று கூறி கன்னத்தில் தட்டினார்.

நிர்மலா தேவியின் விவகாரத்தில் பெயர் அடிபடும் நேரத்தில் ஆளுநர் இப்படி பெண் நிருபரை தொட்டுப்பேசியது பரபரப்பானது.

அது குறித்து அந்த பத்திரிக்கையாளர் டிவிட்டரில் கண்டனத்தை பதிவு செய்து இருக்கிறார். அவர், ‘’செய்தியாளர் சந்திப்பு முடியும் போது ஆளூநரிடம் நான் ஒரு கேள்வி கேட்டேன். என்னுடைய கேள்விக்கு பதில அளிக்காமல் என் கன்னத்தில் தட்டி அமைதிப்படுத்தினார். என்னுடைய தாத்தா போன்ற வயதுடையவர் என்று கூறிக்கொண்டு கன்னத்தில் தட்டுவது அவருக்கு சாதாரணமாக இருக்கலாம். ஆனால் என்னை பொறுத்தவரை அது தவறு. என்னுடைய முகத்தை நான் பல முறை கழுவி விட்டேன். இருந்தாலும் அதில் இருந்து மீள முடியவில்லை. அதனால் ஆத்திரமும் கோபமும் அடைந்தேன் ஆளூநர் பன்வாரிலால் புரோஹித்.’’ என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


இந்த சம்பவத்திற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி. ஆகியோர் தங்களது கண்டனத்தை ட்விட்டரில் பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT