ddd

தமிழக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் 75 மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. வருகின்ற மே 2-ம் தேதி இந்த மையங்களில் தான் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

Advertisment

இதனிடையே கரோனாவின் இரண்டாம் அலை வேகமாகப் பரவுவதால் அதனைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. தற்போது காபந்து அரசே உள்ளது. இதனால் முதல்வர் மற்றும் அமைச்சர்களால் எவ்வித முடிவையும் எடுக்க முடியாது. இருப்பினும் கரோனாவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள தேர்தல் நடத்தை விதிகளில் தேர்தல் ஆணையம் தளர்வுகளை மேற்கொண்டுள்ளது.

Advertisment

இதையடுத்து சேலத்தில் இருந்து சென்னை வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் உள்பட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி இன்று (20ஆம் தேதி) இரவு முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

இதனிடையே ஆட்சி மாற்றம் வரும்னு பல தரப்பும் அழுத்தமா நம்பும் நிலையில், மாநில உளவுத்துறை, இப்ப எடப்பாடி பழனிசாமிக்கு வேறுமாதிரியா ரிப்போர்ட் கொடுத்திருக்கிறதாம்.

Advertisment

தற்போதைய உளவுத்துறை ஐ.ஜி.யான ஈஸ்வரமூர்த்தி, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு ரிப்போர்ட் கொடுத்திருக்கார். அதில் 120 சீட் வரை அ.தி.மு.க.வுக்குக் கிடைக்கலாம் என்று சொல்லியிருக்கார். இதைப் பார்த்து கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்த எடப்பாடி பழனிசாமி, அதில் ஒருசில சீட்டுகள் குறைஞ்சாக்கூடப் பரவாயில்லை. அமித்ஷா மேனேஜ் பண்ணிக் காப்பாத்திடுவார் என்று நம்புகிறாராம். அதேசமயம் எதிர்த்தரப்பு, ஏக உற்சாகத்தில் இருப்பதுதான் அவருக்கு டவுட்டைக் கிளப்புது, மேலும் அவங்க தரப்பை இப்பவே அதிகாரிகள் பலரும் மூவ் பண்றாங்கன்னும் செய்தி வருதுன்னு ரொம்பவே கவலைப்பட்டிருக்கார்.