Advertisment

பிரபல இசையமைப்பாளர் காலமானார்!

The famous Singer-composer Wajid Khan

Advertisment

பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் மற்றும் பாடகர் வாஜித் கான். 42 வயதான அவர் உடநலக் குறைவு காரணமாக மும்பையில் உள்ள செம்பூரின் சூரானா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது உடல் நிலை மோசமானது. இதைத் தொடர்ந்து அவர் இன்று காலை காலமானார்.

வாஜித் கான் காலமான செய்தியை இசையமைப்பாளர் சலீம் மெர்ச்சண்ட் உறுதி படுத்தி உள்ளார். ''அவருக்கு சிறுநீரக பிரச்சினை இருந்தது. சிறிது நாட்களுக்கு முன்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் சமீபத்தில் அவருக்கு சிறுநீரக தொற்று இருப்பது பற்றி தெரிய வந்தது. கடந்த நான்கு நாட்களாக வென்டிலேட்டரில் இருந்த அவரது நிலைமை மோசமடையத் தொடங்கியது. சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை காலமானார்'' எனத் தெரிவித்துள்ளார்.

வாஜித் கான் மறைவுக்குப் பாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

Bollywood music director singer
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe