Advertisment

”தமிழ்நாட்டிற்கு பேரிழப்பு” முதல்வர் எடப்பாடி பழனிசாமி...

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் மறைவிற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Advertisment

eps condolonce for anbazhagan

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

சளி, மூச்சுத் திணறல் காரணமாகக் கடந்த 24-ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்பழகனுக்குத் தொடர் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்தச் சூழலில் இன்று அதிகாலை 1 மணி அளவில் அவர் காலமானார். இந்தச் செய்தி திமுகவினரைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கீழ்ப்பாக்கத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள அன்பழகனின் உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் க.அன்பழகன் மறைவிற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் குறிப்பில், "தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சரும் மூத்த அரசியல்வாதியுமான திமுகவின் பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் மறைவு தமிழ்நாட்டிற்குப் பேரிழப்பு. அன்னாரை இழந்து வாடும் அவர்தாம் குடும்பத்தினருக்கும், திமுக கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபங்கள்!" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "திராவிட இயக்கத்தின் கொள்கைகளில் ஆழமான நம்பிக்கை கொண்டதோடு, 75ஆண்டுகள் பொதுவாழ்வில் அயராது உழைத்து விடைபெற்று சென்றிருக்கும் பேராசிரியர் அன்பழகன் அவர்களது மறைவு தமிழக அரசியலுக்கு ஈடுசெய்ய முடியா இழப்பு. அன்னாரை இழந்துவாடும் அவரது குடும்பத்திற்கும் திமுகவினருக்கும் ஆழ்ந்த இரங்கல்!" என தெரிவித்துள்ளார்.

K. Anbazhagan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe