Skip to main content

பொய்ப்பிரச்சாரம் அம்பலம்! இ-சிகரெட்டுகளுக்கு தடை! 

Published on 18/09/2019 | Edited on 18/09/2019

 

இ-சிகரெட்டுகளை தடை செய்ய மத்திய அரசு முடிவெடுத்து அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். சிகரெட்டுகளைப் போலவே இ.சிகரெட்டுகளாலும் உடலுக்கு தீங்கு ஏற்படுகிறது என்பதாலும், இ-செகரெட்டுகளை பயன்படுத்துவோரில் 77 சதவிகிதம் பேர் மாணவர்கள் என்பதால்  அத்தகைய சிகரெட்டுகள் தயாரிக்கவும் விற்பனை செய்யவும் தடை  விதிக்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

 

எ

 

எலக்ட்ரானிக் சிகரெட்(Electronic Cigarette) என பொருள்படும் இ-சிகரெட்  என்பது எலக்ட்ரானிக் கருவி. அதற்குள் நிகோடின், கிளிசரின் மற்றும் சில கெமிக்கல் போன்றவை நிரப்பப்பட்டிருக்கும். அந்த கருவிக்குள் இருக்கும் பேட்டரியை செயல்பட வைத்தவுடன், ஏற்படும் வெப்ப ஆற்றலின் உதவியினால், நிரப்பப்பட்டிருக்கும் திரவியம் ஆவியாகி அதனை பயன்படுத்துபவருக்கு புகைபிடிக்கும் போது ஏற்படக்கூடிய உணர்வினை கொடுக்கிறது.

 

எ

 

புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களை அப்பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கு ஒரு மாற்றும் என்றும், . சாதாரண சிகரெட்டில் இருக்கக்கூடிய புகையிலை மற்றும் பல பொருள்களானது மனிதர்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்களை தரக்கூடியது.  இந்த அபாயங்கள் இ -சிகரெட்டில் இல்லை முதலில் கூறப்பட்டு வந்தது.  ஆனால், இ-சிகரெட் பழக்கத்திற்கு அடிமையாவதும்,  அதிலிருந்து சிகரெட் பழக்கத்திற்கு தாவுவோரும் அதிகரித்து வருகின்றனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.  மேலும்,  இ-சிகரெட்டில் பயன்படுத்தப்படும் நிகோடின் போன்ற பொருள்களினால்  புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்கள் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.  இதனால், உலகநாடுகள் பலவற்றில் இ-சிகரெட் தடை செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில்ம் தடை செய்யப்பட்டுள்ளது.

 

இ-சிகரெட்டுகளால் நன்மை என்று பொய்ப்பிரச்சாரம் செய்து விற்பனை செய்யப்பட்டு வந்திருக்கிறார்கள் என்பது அம்பலமாகிவிட்டதாலும், இ-சிகரெட்டுகளை பயன்படுத்துவோரில் 77 சதவிகிதம் பேர் மாணவர்கள் என்பதாலும் மத்திய அரசு இதற்கு அதிரடி முடிவெடுத்து தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

இந்தியாவில்  சிகரெட் மற்றும் டொபாகோ கடத்தல் அதிகரிப்பு!!!

Published on 28/03/2018 | Edited on 28/03/2018
cigarette tobacco

 

இந்தியாவில் 2014-2015 ஆம் ஆண்டை விட 2016- 2017 ஆம் ஆண்டு காலங்களில்  சிகரெட் மற்றும் டொபாகோவை கடத்துவது 136 மடங்காக அதிகரித்துள்ளது.கடத்தல் மற்றும் பொருளாதார குற்றங்களை தடுக்கும்  எஃப்.ஐ.சி.சி.ஐ கேஸ்கேட் தெரிவித்துள்ளது.

இந்தியாவில்  சிகரெட் மற்றும் டொபாகோ கடத்தல் 2014 -2015 ஆம் ஆண்டுகளில் 1,312ஆக இருந்த வழக்கு.2016-2017ஆம் ஆண்டுகளில் 3,108 வழக்குகளாக அதிகரித்துள்ளது. எஃப்.ஐ.சி.சி.ஐ கேஸ்கேட் இதுகுறித்து தெரிவித்துள்ளது என்னவென்றால்.நாங்கள்  இவர்களையெல்லாம் காவல்துறை மற்றும் அமலாக்கத்துறை மூலம் கண்காணித்துக்கொண்டுதான் இருக்கின்றோம்.இருந்தாலும் நாங்கள் கைப்பற்றுவது பனிக்கட்டியில் நுனிப்பகுதியை மட்டும்தான் ஆனால் இதை விட மிகப்பெரிய சட்டவிரோத கடத்தல்கள் இன்னும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது .நாட்டின் வருவாய் இழப்பீடு என்பது புகையிலை பொருட்கள், மொபைல் போன்கள், மதுபானம் ஆகியவற்றின் சட்டவிரோத வர்த்தகத்தால்தான் ஏற்படுகிறது.

2014 ஆம் ஆண்டு ஏழு உற்பத்தி துறைகளில் சட்டவிரோதமான வர்த்தகம் நடந்ததால் நாட்டிற்கு சுமார் 39,239ஆயிரம் கோடி வருவாய்நஷ்டமடைந்துள்ளது. சட்டவிரோதமாக வர்த்தகம் நடந்ததில் டொபாக்கோவின்னால் 9,139கோடியும்,மொபைல் போன்களினால் 6,139கோடியும் மற்றும் மதுபானத்தினால் 6,309 கோடியும் அரசிற்கு நஷ்டமாகியுள்ளது.அதுமட்டுமல்லாமல் கடத்தல்காரர்களின் எண்ணிக்கையும்,சட்ட விரோத வர்த்தகமும் இந்தியாவில் வளர்ந்துகொண்டே வருகிறது இதனை கட்டுப்படுத்துவதே மிகப்பெரிய சவாலாக உள்ளது எஃப்.ஐ.சி.சி.ஐ கேஸ்கேட் கூறியது 

Next Story

சிகரெட் பழக்கத்திற்கு பலியாகும் இந்தியக் குழந்தைகள்! - அதிர்ச்சியூட்டும் தகவல்

Published on 17/03/2018 | Edited on 17/03/2018

புகைப்பிடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் உள்ளிட்ட பல விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி, புகைப்பழக்கத்தை கணிசமாக குறைத்திருந்தாலும் கூட இந்தியாவில் இன்னமும் அது பரவலாகவே இருந்து அச்சமூட்டுகிறது. இது ஒருபுறம் இருக்க, 10 - 14 வயதுக்குட்பட்ட 6.25 லட்சம் குழந்தைகள் இந்தப் பழக்கத்திற்கு ஆளாகியிருப்பதாக குளோபல் டொபாக்கோ அட்லஸ் தகவல் வெளியிட்டு அதிர்ச்சியூட்டுகிறது.

 

Cig

 

மேலும், ஒவ்வொரு ஆண்டும் புகைப்பழக்கத்தினால் 9,32,600 இந்தியர்கள் பலியாவதாகவும், வாரமொன்றுக்கு 17,887 பேர் பரிதாபமாக உயிரிழக்கிறார்கள் என்றும் இந்த டொபாக்கோ அட்லஸ் தகவலைத் தயாரித்த அமெரிக்க புற்றுநோய் கூட்டமைப்பு மற்றும் அமெரிக்காவை மையமாகக் கொண்ட வைடல் ஸ்ட்ரேடஜீஸ் அமைப்பும் தெரிவிக்கின்றன. 

 

அதேபோல், நாளொன்றுக்கு  103 மில்லியன் 15 வயதுக்குட்பட்டவர்கள் புகைப்பிடிப்பதால் ஆகும் செலவு ரூ.1,818,691 மில்லியன் என்று அந்தத் தகவல் கூறுகிறது. இதன்மூலம், நேரடி மற்றும் மறைமுகக் காரணங்களால் அதிகளவு உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டுகிறது. 

 

இங்கு எந்தக் காரணத்திற்காக புகைப்பிடிக்கிறோம் என்ற புரிதல் கூட இல்லாமல் காலப்போக்கில் செத்து மடிகின்றனர் பலர். இந்த அவலம் என்று தீரும் என்றே சோகமுகம் காட்டுகிறார்கள் சமூகநல ஆர்வலர்கள்.