Electric trains canceled in Chennai

Advertisment

சென்னையில் 44 மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை எழும்பூர் - விழுப்புரம் ரயில்வே வழித்தடத்தில் உள்ள கோடம்பாக்கம் - தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்பு மற்றும் என்ஜினீயரிங் பணி இன்று (11.02.2024) காலை 11 மணி முதல் மதியம் 3.30 மணி வரை நடைபெற உள்ளது. எனவே சென்னையில் இருந்து புறநகர்களுக்கு இயக்கப்படும் 44 மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின்படி சென்னை கடற்கரை - தாம்பரம், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, தாம்பரம் - சென்னை கடற்கரை, செங்கல்பட்டு - சென்னை கடற்கரை, காஞ்சிபுரம் - சென்னை கடற்கரை, திருமால்பூர் - சென்னை கடற்கரை இடையே இயக்கப்படும் 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.