students

ஒன்று மற்றும்இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது என உயர்நீதிமன்றம் தடைவிதித்து இருந்தது. இதனைத்தொடர்ந்து உயர்நீதிமன்றத்தின் தடையை முறையாக அமல்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Advertisment

ஐந்து அல்லது ஆறு வயது குழந்தைகளுக்கு குறிப்பாக தனியார் பள்ளிகளில் ஆங்கில வலி கல்வி பயிலும் மாணவர்களுக்கு அவர்கள் வயதிற்கும் மீறி வீட்டுப்பாடங்கள் தருகின்றனர். மேலும் அனைத்து வீட்டுப் படங்களும் குழந்தைகளால் செய்ய முடியாத சூழலில் குழந்தைகளின் பெற்றோர் அந்த வீட்டுப் பாடங்களை செய்து அனுப்புவது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. இது தொடர்பான புகார்கள் எழுந்த நிலையில் வழக்கு உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

Advertisment

இதில் ஒன்று மற்றும்இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வீட்டுப் பாடங்கள் தரக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பள்ளிக்கல்வித் துறையும் உயர்நீதி மன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் என கூறியுள்ளது. மேலும் இதற்கென தனியாக பறக்கும் படைகள் அமைத்து உரிய ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும் இந்த ஆய்வின் முடிவில் வீட்டுப் பாடங்கள் மாணவர்களுக்குத்தரப் பட்டுள்ளதா என ஆய்வு செய்து அதை அறிக்கையாக தயார் செய்து சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இளவயதில் அதிகமான வீட்டுப் பாடங்கள் தரப்படுவதால் அவர்களுக்கு படிப்பின் மீது ஆர்வமின்மையும் அதிக சுமையும் ஏற்படும் காரணத்தால் இந்த அறிவிப்பு வெளியிடப் படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.