Published on 12/05/2020 | Edited on 12/05/2020

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் 66 ஆவது பிறந்தநாளையொட்டி, அவருக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று காலை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
’’இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். நலமோடு, புகழோடு, மகிழ்வோடு வாழ்க... வாழ்க... பல்லாண்டு வாழ்க. உங்களின் நல்லாட்சி தொடர்ந்து நடக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார். பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததற்காக ராமதாஸுக்கு எடப்பாடி பழனிச்சாமி நன்றி தெரிவித்துக் கொண்டார். பாமக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.