Skip to main content

’இந்தப்பாவம் பழனிச்சாமியை சும்மா விடாது’- கொங்கு மண்டல அதிமுக நிர்வாகிகள் புலம்பல்

Published on 20/11/2018 | Edited on 21/11/2018
e

 

தமிழ்நாட்டில் நிகழ்ந்த இயற்கை பேரிடர்களில் மிக முக்கியமானது கஜா புயல்.   இதற்கு அரசின் சார்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதோடு மக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.   இதனை தொடர்ந்துதான் புயல் பாதிப்பிற்கு உள்ளான நவம்பர் 15ம் தேதி பிரதான எதிர்க்கட்சியான திமுக உட்பட பல கட்சித்தலைவர்கள் புயலை எதிர்நோக்கிய பேரிடர் மேலாண்மை அமைப்பு சிறப்பாக செயல்பட்டது என அறிக்கை விட்டார்கள்.   ஆனால், புயலின் பாதிப்பு அடுத்தடுத்த நாட்களில்தான் கஜாவின் கோரத்தாண்டவத்தை தமிழகமே அறிந்தது.   குடியிருப்பு வீடுகள் உள்பட தாங்கள் வளர்த்த தென்னை மரங்கள்,   ஆடு, மாடு, கோழிகள் என எல்லாமும் புயல் காற்றின் வேகத்தில் சீரழிந்தன.  ஆரம்ப கட்டத்தில் உயிர் பாதிப்பு 10 பேர் என்றும், மரங்கள் சாய்ந்தது சில ஆயிரம் எனவும் தகவல் வர,  முழுமையான தகவல்கள் 60 க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகி இருப்பதும் சுமார் 5 லட்சம் மரங்கள் வேரோடு சாய்ந்திருப்பதும் 17 ஆயிரம் வீடுகள் புயல் பாதிப்பால் தரை மட்டானது என தொடர்ந்து தகவல் வந்தது.    

 


இந்த நிலைமையில்தான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது சொந்த ஊரான சேலம் மாவட்டத்தில் 14ம் தேதி இரவு முதல் 18ம் தேதி இரவு வரை  முகாமிட்டிருந்தார்.   இது ஏற்கனவே முதல்வரின் பயண திட்டமென கூறப்பட்டாலும்,   புயல் வருகிறது என 10 நாட்களுக்கு முன்பே இந்திய வானிலை ஆராய்ச்சி நிறுவனம் தமிழ்நாடு அரசுக்கு அறிவிப்பு செய்திருந்தது.    ஆனால் முதல்வர் பழனிச்சாமி எதைக்கண்டும் பதில் பேசாமல் திட்டமிட்டபடி தனது சொந்த ஊருக்கு சென்று நிகழ்ச்சிகள் குடும்பத்தினருடன் செயல்பட்டார்.    இதை உள்வாங்கிய கொங்குமண்டல அதிமுக நிர்வாகிகள் வெளிப்படையாக பேசத்தொடங்கியுள்ளனர்.  குறிப்பாக,   சீனியர் அமைச்சரான செங்கோட்டையன் ஆதரவாளர்கள் ஒரு வாக்கியத்தை முன்வைக்கிறார்கள்.

 

 

அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான் என்பதுபோல,  எடப்பாடி பழனிச்சாமியின் செய்கைகள் உள்ளன.   இந்த பழனிச்சாமியை கட்சிக்கு கொண்டு வந்து கட்சி மற்றும் ஆட்சியில் பொறுப்பு வாங்கிக்கொடுத்தது செங்கோட்டையன். ஆனால்,  அதே செங்கோட்டையனை புயல் பாதித்த பகுதிகளுக்கு நேரில் அனுப்பியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால்,  செங்கோட்டையன் நேரில் சென்று அந்த மக்களிடம் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திக்கித்திணறி வருகிறார்.   ஆனால் செங்கோட்டையனால் கொண்டு வரப்பட்ட பழனிச்சாமி, முதல்வர்  நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு புயல் பாதித்த பகுதிகளில் மக்களின் கோபம் நேரில் தாங்கமுடியாது என தெரிந்துகொண்டு ஹெலிகாப்டரில் இன்று வலம் வந்துள்ளார்.    முதல்வராக இருந்த அம்மா,  சென்னையில் மழை வெள்ளம் வந்தபோது கார் மூலம் நேரில் சென்றார்.  ஆனால் எந்த தகுதியுமே இல்லாத எடப்படி பழனிச்சாமி முதல்வர் என்ற தகுதியை மட்டும் வைத்துகொண்டு ஹெலிகாப்டரில் பறந்து சென்றுள்ளார்.

 

 

இவரைகொண்டு வந்த செங்கோட்டையன் மக்களின் கேள்விகளூக்கு பதில் சொல்ல முடியாமல் பரிதவிக்கிறார்.  இதுதாங்க கொடுமை.   இந்தப்பாவம்  பழனிச்சாமையை சும்மா விடாது என கொதித்துபோய் பேசுகிறார்கள் கொங்குமண்டல அதிமுக நிர்வாகிகள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘அப்பா நான் வீடியோல தெரியுறனா’ - நொடிப்பொழுதில் பறிபோன மகிழ்ச்சி; மனதைக் கணமாக்கும் சம்பவம்

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

NN

 

குழந்தைகள் கண்முன்னேயே பெற்றோர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் அவர்கள் குளிப்பதற்கு முன்பு எடுத்த வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

 

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தை அடுத்துள்ள குழந்தை நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜனார்த்தனன் - பவித்ரா தம்பதியினர். இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு மகனும், மூன்று வயதில் ஒரு மகளும் உள்ளனர். நேற்று விடுமுறை தினம் என்பதால் எடப்பாடியை அடுத்துள்ள பூலாம்பட்டி காவிரி கதவணை பகுதிக்கு குடும்பத்துடன் சென்ற ஜனார்த்தனன், அங்கிருந்து மேலப்பாறை பகுதிக்கு சென்றுள்ளார்.

 

குழந்தைகள் இருவரையும் ஒரு பாறையில் அமர வைத்துவிட்டு மனைவியுடன் குளிப்பதற்காக ஆற்றில் இறங்கினார். அதற்கு முன்பாக தனது குழந்தைகளை நீர் குறைந்த அளவில் இருக்கும் பகுதியில் இறக்கி நீச்சல் அடிக்க விட்டு வீடியோவாக பதிவு செய்தார். அப்பொழுது அவரது குழந்தைகள் 'அப்பா நான் வீடியோவில் தெரிகிறேனா' என சிரித்துக் கொண்டே மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

 

அதனைத் தொடர்ந்து குழந்தைகளை பாறை மேல் மேலே அமர வைத்துவிட்டு ஜனார்த்தனன், பவித்ரா ஆகிய இருவரும் ஆற்றில் இறங்கி குளித்த பொழுது ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர். இருவருக்கும் நீச்சல் தெரியாத நிலையில் தண்ணீரில் தத்தளித்துள்ளனர். இதனை கரையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த குழந்தைகள் கதறி அழுதுள்ளனர். அவர்களது அழுகுரலைக் கேட்டு அக்கம் பக்கத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் ஓடி வந்து இருவரையும் மீட்க ஆற்றுக்குள் இறங்கினர். ஆனால் அதற்கு முன்பாகவே ஜனார்த்தனனும் அவரது மனைவி பவித்ராவும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

 

இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அவர்கள் ஆற்றில் குளிப்பதற்கு முன்னால் எடுத்த அந்த வீடியோவும் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

 

 

Next Story

"நாடாளுமன்றத் தேர்தலில் 39 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும்" - செங்கோட்டையன் 

Published on 30/05/2023 | Edited on 30/05/2023

 

admk sengottaiyan talks about admk won 39 parliamentary seat 
கோப்பு படம்

 

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் சாலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் எம்.எல்.ஏ தலைமையில் திமுக அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் பெருகி விட்டதாகவும், கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தியும், அதிமுக சார்பில் நேற்று தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் கோபி மொடச்சூர் சாலையில் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் எம்.எல்.ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஊழல் முறைகேடு, கள்ளச்சாராயம், போலி மதுபானங்களால் இறப்பு, கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற சம்பவங்களைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு ஆளும் திமுக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் பண்ணாரி மற்றும்  நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

தொடர்ந்து கண்டன உரையாற்றிய முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் "திமுக ஆட்சிக்கு வந்தாலே சட்டம் ஒழுங்கு சரியில்லை. திமுக ஆட்சிக்கு வந்தாலே கள்ளச்சாராயம் பெருகிக் கொண்டுள்ளது. அதனால் 21 மரணங்கள் ஏற்பட்டுள்ளது. எந்த திட்டங்களையும் திமுகவால் கொண்டு வர முடியவில்லை. அதிமுக ஆட்சியில் இருந்தவரை தமிழகத்தில் எந்த தீய சக்திகளும் நடமாட முடியவில்லை. அதிமுகவை பொறுத்தவரை இரண்டு கோடி உறுப்பினர்களை கொண்டு வர வேண்டும் என்று முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு இரண்டு கோடி உறுப்பினர்களைக் கொண்ட இயக்கம் அதிமுக என்ற வரலாற்றை படைப்போம். அதிமுகவை எவராலும் வீழ்த்த முடியாது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 39 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என்பதை எவராலும் தவிர்க்க முடியாது.  2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தலைமையில் ஆட்சி அமைவதையும் எவராலும் தவிர்க்க முடியாது. அதிமுக ஆர்ப்பாட்டம் செய்வதற்கு பிறகுதான் திமுக விழித்திருக்கிறார்கள். திமுக அரசுக்கு நம்மைப் போன்றவர்கள் கோஷம் போட்டால்தான் விடிகிறது. இல்லை என்றால் விடிவு இல்லை" எனப் பேசினார்.