Skip to main content

விஷமிகள் திட்டமிட்டு பரப்பும் வதந்திகளை நம்ப வேண்டாம்: மு.க.ஸ்டாலின்

Published on 27/07/2018 | Edited on 27/07/2018


கலைஞர் உடல்நிலை குறித்து விஷமிகள் திட்டமிட்டு பரப்பும் எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திமுக தலைவர் கலைஞர் உடல்நிலை குறித்து விஷமிகள் திட்டமிட்டு பரப்பும் எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம். கலைஞருக்கு அளிக்கப்பட்டு வரும் தொடர் சிகிச்சையின் விளைவாக உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் மருத்துவர்கள் கலைஞரை நன்கு கவனித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

மருத்துவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களும் கலைஞரை சந்திக்க வருவதை திவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

விஷமிகள் திட்டமிட்டு பரப்பும் எந்த வதந்திகளுக்கும் செவி மடுக்கவும் வேண்டாம், அந்த வதந்திகளை நம்பவும் வேண்டாம் என திமுக தொண்டர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களுக்கும் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்