Advertisment

"டாக்டர் சைமனின் ஆசையை அரசு நிறைவேற்றாதது துரதிர்ஷ்ட்டமானது" -முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயம் அதிரடி 

கரோனா தாக்குதலில் மரமணடைந்த டாக்டர் சைமனின் உடல் கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்ய முடியாத சூழலில் சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள வேலங்காடு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. உடல் அடக்கத்திற்கு எழுந்த எதிர்ப்புகளை சமாளித்து உடலை அடக்கம் செய்தனர் மாநகராட்சி அதிகாரிகள். இதனால் ஏற்பட்ட சர்ச்சைகள் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisment

devasahayam

இந்த சூழலில், "கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் தனது உடல் அடக்கம் செய்யப்பட வேண்டுமென எனது கணவர் விரும்பினார். அவரது ஆசையை அரசு நிறைவேற்ற வேண்டும்" என சைமனின் மனைவி ஆனந்தி வேண்டுகோள் வைத்திருந்தார்.

Nakkheeran app

Advertisment

சைமனின் ஆசையை நிறைவேற்ற அவரது உடல் மீண்டும் தோண்டி எடுக்கப்படுமா? என்கிற எதிர்பார்ப்பு எதிரொலிக்கச் செய்தது. இந்த நிலையில், 'டாக்டர் சைமனின் கோரிக்கையை ஏற்க இயலாது' என மறுத்து ஒரு விளக்க அறிக்கையைத் தந்திருக்கிறது சென்னை மாநகராட்சி நிர்வாகம்.

gg

இது, கிறிஸ்தவர்கள் மத்தியில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இது குறித்து நம்மிடம் பேசிய ஓய்வு பெற்ற மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயம், "கிறிஸ்தவ சடங்குகளின்படி மருத்துவருக்கு ஏற்கெனவே நல்ல அடக்கம் வழங்கப்பட்டிருப்பதாக சென்னை மாநகராட்சியின் கருத்து உண்மைகளின் அடிப்படையில் சொல்லப்படவில்லை.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தின் நிர்வாகம் ஒப்புதல் தந்திருக்கும் நிலையில், டாகடர் சைமனின் உடல் மீண்டும் அடக்கம் செய்வதற்கு நிராகரிக்கப் பட்டதற்கான காரணங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை ; நம்பமுடியாதவை ! கீழ்ப்பாக்கம் கிறிஸ்தவ கல்லறை அதிகாரிகள் அடக்கத்தினை ஆதரித்தபோதும் மாநகராட்சி அதிகாரிகள் தன்னிச்சையாக அதை நிராகரிப்பது நியாயமற்றது.

ஆனந்தி சைமனின் உண்மையான வேண்டுகோளை நிறைவேற்ற தமிழக அரசு முன் வராததது துரிதிர்ஷ்டமானது. சைமனின் உடல் அடக்கத்தில் நிறைய அரசியல் இருக்கிறது. வெளிப்புற காரணங்களாலேயே ஆனந்தி சைமனின் கோரிக்கையை நிராகத்திருக்கிறார்கள். மதசார்பற்ற ஜனநாயக நாட்டில் தமிழக ஆட்சியாளர்களின் முடிவுகள் துரதிர்ஷ்டமாக இருக்கின்றன. ஆனந்தியின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் மாநகராட்சியின் உத்தரவை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். கோரிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்கிறார் எம்.ஜி.தேவசகாயம்.

Chennai Doctor
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe