Advertisment

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியை, காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றிய திமுகவைச் சேர்ந்த பூந்தண்டலம் ஊராட்சி செயலாளர் தயாளமூர்த்தி, ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஜூலி தயாளமூர்த்தி, கிளை செயலாளர்களான பூந்தண்டலம் டி.ஆதிகேசவன், சக்திநகர் எஸ்சவுந்தரராஜன், புதுநல்லூர் இ.வாழ்மணி, ஒன்றிய பிரதிநிதி எஸ்.சங்கர் மற்றும் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் என 35 பேர் நேரில் சந்தித்து அதிமுகவில் இணைந்தனர்.

இந்த நிகழ்ச்சியின்போது, காஞ்சிபுரம் அதிமுக மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம், குன்றத்தூர் ஒன்றிய செயலாளரும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்எல்ஏவுமான கே.பழனி உள்பட அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

பின் இவர்கள் அனைவரும் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தையும் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.