Advertisment
கரோனா நோய்த் தொற்று பரவாமல் இருக்க நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக மக்களின் நலன் சார்ந்த பிரச்சினை குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (16.4.2020 வியாழக்கிழமை) காலை 11 மணி அளவில் தோழமைக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம், காணொலிக் காட்சி மூலம் நடைபெற்றது.