mkss 5

திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வானார் என பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்தார்.

திமுகவின் பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. தலைவர் மற்றும் பொருளாளர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் மனுத் தாக்கல் செய்தனர். இவர்களை தவிர வேறுயாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதனால் அவர்கள் இருவரும் ஒருமனதாக தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்தார்.

Advertisment

இதைத்தொடர்ந்து தொண்டர்களின் உற்சாக கரகோசத்துக்கு மத்தியில் மேடை ஏறிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து பொதுச்செயலாளர் க.அன்பழகன் கவுரவித்தார். இதன் மூலம் திமுகவின் 2-வது தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து பொருளாளராக துரைமுருகனும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அன்பழகன் அறிவித்தார்.